உயிர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் இடம் தான் மருத்துவமனை. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இத்துறையில் ஊழல்களும், சீர்கேடுகளும் மலிந்துவிட்டன. தங்கள் ஆதாயத்துக்காக மருத்துவமனைகள் மறைக்க வாய்ப்புள்ள பல விஷயங்கள் உள்ளன.

பயிற்சி மருத்துவர்கள்:

பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் பயிற்சி மருத்துவர்களை கொண்டு செய்யப்படுகின்றன. இது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதோடு பல வகையிலும் நம்மை பாதிக்க கூடும். இது போன்ற இரகசியத்தை மருத்துவமனைகள் நம்மிடம் சொல்லாது. 

தவறான சிகிச்சை 
சில நேரங்களில் சில மருத்துவர்கள் தவறான சிகிச்சையை அளித்து விடுவார்கள். இதனால் உயிர் இழப்புகள் கூட ஏற்பட்டதுண்டு. இது போன்ற விபரீதங்களை மருத்துவமனை நம்மிடம் சொல்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ரிப்போர்ட்டை வேறு மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ளலாம்.

திருட்டு:

சில மருத்துவமனைகள் உங்களின் ரிப்போர்ட்டை கேட்கும் வேறு நபர்களுக்கு கொடுக்கலாம். இதில் பண பேரத்துக்கும் வாய்ப்பு உண்டு. இத்தகைய திருட்டுத் தனங்களை மருத்துமனைகள் வெளிப்படுத்துவதில்லை.

என்ன மாத்திரை ?

 சில செவிலியர்கள் முறையான மருந்துகளை தர மாட்டார்கள். மருந்தின் அளவை மருத்துவர்களே அறிந்திருப்பர். செவிலியர்கள் அளிக்கும் அளவுக்கு அதிகமான அல்லது குறைவான மருந்துகள் நமது ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். 

முன்னுரிமை:

 நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு உடனடி சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை இருந்தாலும் செல்வந்தர்களுக்கே மருத்துவம் பார்ப்பார்கள். இதை பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள். 

கட்டணங்கள்:

 மருத்துவமனைக்கு சென்று விட்டோம், சேர்ந்து விட்டோம் என்றில்லாமல் குறிப்பாக பண விஷயத்தில் அதிக கவனம் தேவை ரமணா பட பாணியில் கூட நடக்கலாம். பில்லில் கொடுத்துள்ள ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு உள்ளதா என பரிசோதித்து கொள்ளுங்கள். 

மறு பரிசோதனை:

டெஸ்ட்கள் எடுக்கும் போது, ரிப்போர்ட் தவறுதலாக மாறலாம். இந்த நிலையில் ஒரு முறைக்கு 2, 3 முறை டெஸ்ட் எடுத்து கொள்வது நல்லது. டெஸ்ட் எடுக்கும் முறை குறித்து மருத்துவமனைகள் தெளிவைத் தருவதில்லை.

சுத்தமாக உள்ளதா ? 

அட்மிட் செய்யும் இடத்தின் சுத்தத்தை கவனிப்பது அவசியம். பெட் சுத்தமாக உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சற்று முன்பு வேறு ஒரு நோயாளி இருந்த பெட்டை சுத்தம் செய்யாமல் உடனடியாக வேறு ஒருவருக்கு ஒதுக்கும் மருத்துவமனைகளும் உள்ளன. எனவே நோய்க்கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு.

மருத்துவர்களின் மனநிலை:

மருத்துவரின் மனநிலையை உறுதி செய்வது முக்கியம். மருத்துவர்களின் சொந்த பிரச்சினைகள் சிகிச்சையில் பிரதிபலிக்கக் கூடும். உங்களை கவனித்து கொள்ளும் மருத்துவரையோ அல்லது செவிலியரையோ அடிக்கடி தொல்லை செய்யாதீர்கள். 

குழந்தை மாற்றுக்கள்
பல மருத்துவமனைகள் பிறக்கும் குழந்தைகளை கூட மாற்றி விடுகின்றன. பணத்துக்காகவும், தவறுதலாகவும் இவை நடைபெறுகின்றன.

இந்த முறைகேடுகள் எல்லா மருத்துவமனைக்கும் பொருந்தாது என்ற போதும் பல மருத்துவமனையில் நடக்கின்றன. மக்கள் தான் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.