கொரோனா வைரஸால் பாதித்து.. உயிர் பிழைத்த மருத்துவர் அதிர்ச்சி பேட்டி..! என்ன சொல்றாருன்னு நீங்களே பாருங்கள்...! 

கொரானா வைரஸ் தாக்கத்தால் பெரும் பீதியில் மக்கள் இருக்கும் இந்த ஓர் தருணத்தில் அவர்களுக்கு சற்று ஆறுதலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.கொரானாவால் பாதிக்கப்பட்டு மீண்ட மூன்று மருத்துவர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

ஆம்.. கடந்த ஒரு வார காலமாக சீனாவில் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மிக எளிதாக, வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மூத்த மருத்துவர் ஒருவரும் ஒன்பது நாள் சிகிச்சை பெற்றபின் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மருத்து உலகில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

இந்த ஒரு நிலையில் தற்போது சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று மருத்துவர்கள் சிகிச்சை பெற்ற பின்பு வீடு திரும்பியுள்ளனர்.கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டது சோதனையின் மூலம் தெரியவந்ததை அடுத்து தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்த மருத்துவர்கள் அதிலிருந்து மீண்டு ஜனவரி 28ஆம் தேதி அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இதுகுறித்து சீன செய்தி குழுமம் மீண்டுவந்த மருத்துவரிடம் பேட்டி கண்டது.

அப்போது இரண்டு வாரம் சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டு வந்துள்ளோம். மகிழ்ச்சியாக உள்ளது. அறிவியலை நம்புங்கள் வைரஸை வெல்ல முடியும் என வீடியோ மூலமாக பேட்டி கொடுத்துள்ளார். இதனை சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இவர்களுடைய இந்த பேட்டி தற்போது மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பீதியில் இருந்த மக்களுக்கு ஆதரவுகொடுப்பதாகவும் கொரானா எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.