சூட்டோடு சூடாக நம் மக்களுக்கு இந்த நல்ல விஷயத்தை கொண்டு சேருங்கள்..! பிளாஸ்டிக் தடையை அடுத்து....

உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தண்ணீர் இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் வாழ முடியுமா? முடியாது அல்லவா.. அப்படிப்பட்ட தண்ணீருக்காக இன்று நாம் பெரும் பாடு படுகிறோம்.

காரணம் தற்போது நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி செல்கிறது. முன்பொரு காலத்தில், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு முன்பாக நிலத்தடி நீரை மிக எளிதாக நம்மால் எடுத்து பயன்படுத்த முடிந்தது. அதனையே குடிநீராகவும் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலை இன்று மாறி விட்டது பல நூறு அடி ஆழம் தோண்டினால் தான் தண்ணீரே தென்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு வறட்சியான சூழல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் தினம் தினம் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ரூபாய் 30 முதல் 40 வரை விற்கக்கூடிய தண்ணீர் கேனை வாங்கி சமையல் செய்கின்றனர்.

குடிப்பதற்கும் விலை கொடுத்து வாங்கும் அந்த தண்ணீரை தான் பயன்படுத்துகின்றோம். அவ்வாறு பயன்படுத்தக்கூடிய அந்த தண்ணீரில் நம் உடலுக்கு தேவையான தாதுப்பொருட்கள் உள்ளனவா என்றால் இல்லை என்பதே உண்மை. இதற்கு மாற்றாக நாம் என்ன செய்யவேண்டும்.. சற்று சிந்தித்து பாருங்கள்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது அந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக பாக்குமட்டை, வாழை இலை, கைப்பை உள்ளிட்டவற்றுக்கு பெறும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோன்று, சூட்டோடு சூடாக நம்முடைய வாழ்க்கை முறையில் மேலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். அது என்ன என்று கேட்கிறீர்களா ? ஆம். விலை கொடுத்து வாங்கும் வாட்டர் கேனில் உள்ள தண்ணீரை நம் வீட்டில் உள்ள ஒரு பானையில் ஊற்றி வையுங்கள். அதில் சிறிதளவு மிளகு, சீரகம், தேங்காய்கொட்டை, வெட்டிவேர் சிறிதளவு வெந்தயம் இவை அனைத்தையும் ஒரு சிறிய துண்டில் வைத்து, அதனை சுமார் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானையில் போட்டு வையுங்கள்.

பின்னர் இந்த தண்ணீரை  நாம் அருந்துவதால் நல்ல பலனைக் கொடுக்கும்.முயற்சி செய்து பாருங்கள் இன்றைய தலைமுறையினருக்கு நாம் கற்றுக் கொடுக்கும் மிக முக்கியமான நல்ல பழக்கமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது!