கோடை காலம் வந்தாச்சு ..வெயில் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வெப்பத்துடன் சேர்ந்து அனல் காற்றும் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. இந்த நிலையில் இன்று மட்டும் குறிப்பாக 13 மாவட்டங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகையும் விட்டு இருந்தது. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நாம் எடுத்த உறுதி மொழி இதுதான் என ஒரு ஸ்வீட் மெமரி வைரலாக பரவி வருகிறது. அது என்ன தெரியுமா...? 

குளிர்பானங்களை விற்க மாட்டோம்... வாங்க மாட்டோம் என்று...ஏதோ ஒரு எமோஷன்ல அன்றைய தினம் மட்டும் சொல்லிவிட்டு, மீண்டும் அதே நிலை தான் தமிழகத்தில்...சரி அதுக்கு என்ன இப்பனு தோணும்  அல்லவா..? அதாவது குளிர் பானங்களை எடுத்துக்கொண்டால், உடலுக்கு நல்லது கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே...

இதற்கு பதிலாக வெறும் ரூ.20 இல் இளநீர் கிடைக்கிறது, 10 ரூபாய்க்கு  தர்பூசணி கிடைக்கிறது. நுங்கு வெறும் ரூ.5 மட்டுமே, எலுமிச்சை 2 ரூபாய் தான்,வெள்ளரிப்பழம் 2 ரூபாய் தான், திராட்சை 20 ரூபாய் தான் இது போன்று இயற்கையான முறையில், இயற்கை தந்த வர பிரசாதமான இவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டால் ஆரோகியமான உடம்பை பெறலாம். 

நம் உடல் சூடும் தணியும்...விவசாய பெருமக்களுக்கு நாம் செய்ய  உள்ள பெரிய உதவியாகவும் இருக்கும்.