do you know why snoring is coming during night?

குறட்டையை சாதரணமாக எண்ணாதீங்க..! இந்த " இந்த நோய்கள் இருந்தால் தான் குறட்டை வருமாம் ..!

பொதுவாகவே உறங்கும் போது வயதானவர்களுக்கு தான் முன்பெல்லாம் குறட்டை வந்தது . ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதினருகே குறட்டை பெரிய சப்தத்துடன் வர தொடங்குகிறது.

இதனை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது . ஏனெனில் குறட்டை வருபவர்களுக்கு அடுத்த நாள் காலை தலை வலி உடல் சோர்வு, வேளையில் ஆர்வம் இல்லாமல் போவது என மிகவும் கஷ்டமாக இருக்கும்

இது அப்படியே தொடர்கிறது என்றால், ஒரு சில முக்கிய பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விடும் அதில் குறிப்பாக, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்க வாதம் உள்ளிட்ட நோய்களுக்கு இது முக்கிய காரணமாக இருக்குமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்

எப்போது குறட்டை வரும் தெரியுமா..?

நாம் சுவாசிக்கும் காற்றானது வாய் தொண்டை மூச்சி குழல் வழியாக நுரையீரலை அடைகிறது.

இந்த பாதையில் எதாவது ஒரு இடத்தில தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும் அதாவது தூங்கும் போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வு எடுக்கும் அப்போது மூச்சுப்பாதையின் அளவு குறுகி விடுகிறது .

இப்படி குறுகிய பாதியில், சுவாசக்காற்று உட்செல்லும் போது, குறட்டை ஏற்படுகிறது .

அதே போன்று மல்லாந்து படுத்து உறங்கும் போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கி, தொண்டைக்குள் இறங்கி விடும் .

இதனால் மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை சப்தம் உருவாகும்.

குறட்டை பிரச்சனைக்கு மரபு வழி, உடல் பருமன் ஆகியவை முக்கிய காரணம். அதே போல் மூக்கடைப்பு, மூக்கு, இடைச்சுவர் வளைவு,சைனஸ் தொல்லை, டான்சில் வளர்ச்சி, தைராய்டு பிரச்சனை போன்றவையும் குறட்டை பிரச்னை உருவாக்கு கின்றன.

குறிப்பாக பெண்களுக்கு மாத விடை சுழற்சி முடிவடையும் களத்தில், இந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகம்

இது தவிர புகைபிடிப்பது, மது அருந்துவது , அளவுக்கு அதிகமாக தொக்க மருந்து அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்ற வற்றாலும் குறட்டை எற்படுகிறது

இதனை தடுக்க குறட்டை அதிகம் வருபர்களின் உடலில், எலக்ட்ரோடுகளை பொருத்தி அதன் மூலம் அவர்களது மூளை அலை செயல்பாடு, இதய துடிப்பு, மூச்சின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு போன்றவை கணக்கிடப்படும்

இத்துடன் கண் கால்களின் இயக்கம் ஆகியவையும் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வுக்கு தூக்க ஆய்வு என்று பெயர். இதனை பொருத்து மருந்து மாத்திரை வழங்கப் படுகிறது.