புது டிரஸ்ஸை துவைக்காமல் போடும் நபரா? அப்ப கண்டிப்பா 'இத' தெரிஞ்சுகோங்க!
வைரஸ்கள் புதிய ஆடைகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.
ஆடைகளை விரும்பாதவர்கள் யார்தான் இருக்க முடியும். இன்றைய ஃபேஷன் யுகத்தில் பிரபலங்கள் மட்டுமன்றி, சாமானியர்களும் ஆடைகளை வாங்கி குவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இப்போது புது ஆடைகளை வாங்க பண்டிகைக்காக யாரும் காத்திருப்பதில்லை. அந்த நேரத்தில், கண்ணுக்கு பட்டதையும் உடனே வாங்கி விடுகிறார்கள். அது ஆன்லைனாக இருந்தாலும் சரி, ஷாப்பிங் மாலாக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஷாப்பிங் பிடிக்கும்.
அந்த நேரத்தில், இந்த ஆடைகளை நமக்கு கச்சிதமாக பொருந்துமா இல்லையா என்பதை ஒரு முறை முயற்சிப்போம்ம் ஆனால், ஆடைகளை முயற்சிக்கும் முன் ஒருமுறை உங்கள் ஆரோக்கியத்தை பற்றியும் யோசியுங்கள். ஏனெனில், அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தற்போது, ஆன்லைனில் அதிகமாக ஆடைகளை வாங்கி, அவை சரியாக பொருந்தவில்லை என்றால், அவற்றை திருப்பி அனுப்பி விடுகிறோம். அதேபோல ஷோரூம்களில் துணிகளை முயற்சி செய்து பிடிக்கவில்லை என்றால், அங்கேயே போட்டுவிட்டு செல்கிறோம். ஆனால் இது சரும தொற்று பிரச்சனை ஏற்படுத்தும் தெரியுமா? அந்தவகையில், வைரஸ்கள் புதிய ஆடைகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: Summer Tips : அடிக்கிற வெயிலுக்கு உங்கள Cool-ஆ வச்சுக்க இந்த Color Dress தான் பெஸ்ட்!
துவைக்காமல் புதிய ஆடைகளை ஏன் அணியக்கூடாது?
1. கிருமிகள் உடலில் ஒட்டிக்கொள்ளும்:
பொதுவாகவே, பலருக்கு புதிய ஆடைகளை ஒரு முறை அணிந்த பிறகு தான் துவைக்க விரும்புவார்கள். ஆனால், புதிய ஆடைகளை சுவைக்காமல் அணிவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில், நீங்கள் ஒரு ஷாப்பிங் மாலில் வாங்கும் ஆடைகள், ஏற்கனவே பலரால் முயற்சி செய்யப்பட்டு உள்ளன. அந்த ஆடைகளில் நபரின் தலைமுடி, வியர்வை, தோலில் பாக்டீரியா, அரிப்பு பூஞ்சை போன்றவை எஞ்சியிருக்கும். எனவே, நீங்கள் அதை துவைக்காமல் அணிந்தால் கிருமிகள் அனைத்தும் உங்கள் உடலில் ஒட்டிக்கொள்ளும்..
2. ரசாயனங்கள் பயன்பாட்டால்:
பெரும்பாலான நிறுவனங்கள் துணிகளுக்கு வண்ணம் தீட்ட பல ரசாயனங்களை பயன்படுத்துகின்றன. இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மோசமான தீங்கு விளைவிக்கும். இந்த ரசாயனம் பற்றி நிறுவனங்கள் அதிக தகவல்களை வழங்குவதில்லை. குறிப்பாக இந்த ரசாயனங்கள் உணவிறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் ஆடைகளை துவைக்காமல் பயன்படுத்தாதீர்கள். ஒருவேளை அப்படி அணிந்தால், உடனே உங்கள் சருமத்தை கழுவுங்கள.
3. கொப்புளங்கள் வரும்:
புது ஆடைகளை துவைக்காமல் அணிந்தால் அக்குள், கழுத்து, முன்கை, இடுப்பு, தொடையில் போன்றவற்றில் கொப்புளங்கள் வரும். எனவே, புதிய ஆடைகளை துவைக்காமல் ஒருபோதும் அணிய வேண்டாம்.
இதையும் படிங்க: தினமும் பெண்கள் கட்டும் சேலையில் இவ்வளவு அறிவியல் காரணம் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
4. துவைக்காத உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டாம்:
உள்ளாடைகளை துவைத்து பின்னரே அணிவது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லையெனில் தோல் பிரச்சினைகள் ஏற்படும்.
5. குழந்தைகளின் துணிகள் : குழந்தைகளுக்கு துவைக்காமல் ஒருபோதும் புதிய ஆடைகளை போட்டு விடாதீர்கள். ரசாயனங்கள் மற்றும் பிற பாக்டீரியாக்கள் குழந்தையின் உடலில் நுழைந்து விடும்ம் எனவே, புதிய ஆடைகளை நன்றாக துவைத்த பின்னரே பயன்படுத்துங்கள். அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால், அவர்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D