சுப நிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா? அறிவியல் காரணம் இதோ..!
சுப நிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டி இருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள் அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? இத்தொகுப்பில் அதற்கான அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே, நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொன்ன காரியம் எதுவும் தவறாக இருந்தது இல்லை. எவ்வளவோ மரங்கள் இருந்தும் நம்முடைய வீட்டின் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா? மேலும் வீட்டில் நடக்கும் சுப காரியங்களின் அடையாளமாக வாழை மரத்தைக் கட்டுகிறோம். இது தொன்று தொட்டு திருவிழாக்களிலும் திருமண நிகழ்வுகளிலும் வழக்கமாகியுள்ளது. குறிப்பாக வாழைமரம் கட்டுவது தமிழகம் மத்தியில் ஒரு மங்களகரமான விடயமாகும். அதுமட்டுமல்லாமல் மணமக்கள் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்ற மரபிலே வாழை மரத்தை திருமண வீடுகளில் கட்டுகிறார்கள்.
இதையும் படிங்க: Banana Tree: வாழை மரத்திற்கு மத முக்கியத்துவம் ஏன்? சுவாரசியமான தகவல்கள் இதோ..!!
அறிவியல் காரணம்:
- வாழை இலை, வாழைத்தண்டுச் சாறு, வாழைக்கிழங்கின் சாறு ஆகியவை ஒரு நச்சு முறிப்பான்கள் ஆகும். ஏனெனில் கிராமங்களில் ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டால் முதலில் அந்நபருக்கு வாழைச்சாறு தான் குடிக்கக்கொடுப்பார்கள். இதனை இக்காலத்திலும் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.
- மேலும் வாழையிலையின் மேல் காணப்படும் பச்சைத் தன்மை குளோரோபில் எனும் வேதிப்பொருள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதுபோல் வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், நோயின்றி நீண்ட நாட்கள் ஆராக்கியமாக வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.
- அதுமட்டுமின்றி, வாழை மரத்தில் இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். அவற்றில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை உள்ளது.
- மேலும் தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்யும் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் விழா காலங்களில் ஏராளமான விருந்தினர்கள் வருவதால், அவர்களின் வெளி சுவாசத்தின் மூலம் பெறப்படும் கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலக்கும். அதனை சமநிலைப்படுத்தவே வாழை மரங்கள் சுப நிகழ்ச்சிகளில் காட்டப்படுகிறது.
- அதுமட்டுமல்லாமல் அதிகப்படியாக கூட்டம் சேரும்போது அவர்களின் உடலில் உஷ்ணம் மற்றும் வியர்வை ஒன்றாக சேரும். இதனால் ஒரு விதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, இவற்றிற்கு தீர்வாகத்தான் வாழை மரங்கள் சுப நிகழ்ச்சிகளில் கட்டுப்படுகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது அவற்றை தடுக்கவும் வாழைமரம் கட்டப்படுகிறது.
- இது மட்டும் இன்றி வீட்டில் விசேஷம் அல்லது நல்ல காரியங்கள் நடைபெறும் சமயத்தில் வீட்டிற்கு எந்த விதமான கண் திருஷ்டியும் ஏற்படக்கூடாது என்பதற்காக வாழைமரம் வாசலில் கட்டப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இவையே வாழைமரம் சுப நிகழ்ச்சிகளில் கட்டப்படுவதற்கான காரணங்கள் ஆகும்.