Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் டெங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஆண்டு எது தெரியுமா ..? என்னது இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டாங்களா..?

மழைக்காலம் தொடங்கிய உடன் ‘ஏடிஸ்’ கொசுக்கள் சுதந்திரமாக இனப்பெருக்கம் செய்து, நோய் பரப்ப தொடங்கி விடும். 

do you know in which year dengue affects most in tamil nadu?
Author
Chennai, First Published Jan 31, 2019, 4:15 PM IST

தமிழகத்தில் டெங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஆண்டு தெரியுமா ..?

மழைக்காலம் தொடங்கிய உடன் ‘ஏடிஸ்’ கொசுக்கள் சுதந்திரமாக இனப்பெருக்கம் செய்து, நோய் பரப்ப தொடங்கி விடும். ஆண்டுக்கு ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த அரசும்  பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

இன்னும்  சொல்லப்போனால், கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து  டெங்கு காய்ச்சலினால் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் மத்திய அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, அதன் பாதிப்பை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். 

தமிழகத்தில் மட்டும்  2010-ம் ஆண்டு - 2051, 2011  ஆம் ஆண்டு - 2501, 2012 ஆம் ஆண்டு -12826, 2013  ஆம் ஆண்டு - 6122,  2014 ஆம் ஆண்டு - 2804, 2015 ஆம் ஆண்டு - 4535, 2016 ஆம் ஆண்டு - 2531 நபர்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

do you know in which year dengue affects most in tamil nadu?

ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் அதிக நபர்கள் டெங்கு காய்ச்சலால், பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த  குறிப்பிட்ட ஆண்டு மட்டும் மொத்தம் 23,294 பேர் பாதிக்கபட்டனர், 65 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டில், இதுவரை டெங்கு காய்ச்சலினால் தமிழகத்தில் 104 பேர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே சுகாதாரத்துறை இணையதளத்தில் தகவல் உள்ளது. 

do you know in which year dengue affects most in tamil nadu?

பொதுவாகவே, என்னதான் டெங்குவை தடுக்க பல வழிமுறைகளை  அரசு எடுத்து வந்தாலும், ஆண்டுக்கு ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும், நம்மை  நாம் எப்படி பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios