நீங்கள்  தனுக்கு தானே பேசுபவர்களா..? உங்களை யாராவது பைத்தியம்னு கிண்டல் செய்கிறார்களா....இதை படிங்க...இப்ப சொல்லுங்க..!

தனக்கு தானே பேசிக்கொள்வது ஒரு மனநோயாக இருக்கும் என பலரும் நினைத்து இருப்பார்கள். உண்மையில் நாமும் அப்படிதானே நினைப்போம்....

ஆனால் அவ்வாறு தனக்கு தானே பேசிக்கொள்வது நல்லதா என்றால் அது நல்லது தான்...எந்த விதத்தில் என்று கேட்கிறீர்களா என்றால், வாங்க மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

 எண்ணங்களை பிரதிபலிக்கிறது

அதாவது...ஐயோ ஆபிசுக்கு லேட் ஆச்சே...இன்னைக்கு நான் அழகா தெரியுற மாதிரி இருக்கே....வண்டி கீ எங்க வெச்சுட்டேன் தெரியலையே...... இது போன்ற கேள்விகள் நம்மை அறியாமல் வாய் விற்று பேசி விடுவோம் அல்லவா ...?

ஆமாம் இது நல்லது தான்...நம்முடன் யாரும் பேசுவதற்கு ஆள் இல்லை என்றாலும், நம்முடைய கவலைகள் நம்முடைய சிந்தனைகளை வாய் விட்டு சொல்லும் போது அது வெளிப்படுகிறது. இது சரியான ஒன்று தான் என மனநல மருத்துவர்களே தெரிவித்து உள்ளனர்

மருத்துவர்களே தனியாக பேசிக்கொள்வார்கள் ஏன் தெரியுமா ,..?

மன நல மருத்துவரோ அல்லது மக்களிடம் பேசிக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு துறையில் உள்ள நபரோ....எப்படியெல்லாம் மக்களிடம் பேச வேண்டும்...எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்... அவ்வாறு பயன்படுத்தும் போது என்ன விளைவுகள் இருக்கும்..? நம்மை சுற்றி நாம் எப்போதும் பாசிட்டிவாக தான் பேசுகிறோமா..? இது போன்ற பல விஷயங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது தன்னை தானே  அறிந்துக்கொள்ள உதவும் "தானே பேசிக்கொள்வது தான்"...

இது தொடர்பாக மெக்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் 29  மாணவர்களை வைத்து ஆராய்ச்சி செய்தது. அதில் தனக்கு தானே பேசிக்கொள்ளும் ஒரு நபரும், இடம் பெற்று இருந்தார். மற்றவர்களுடன் இவரை ஒப்பிட்டு பார்க்கும் போது, தனுக்கு தானே பேசிக்கொள்ளும் நபருக்கு மன அழுத்தம் அவ்வளவாக இல்லையாம்.

பாசிடிவ் வைப்ரேஷன்...!  வெற்றியின் பாதியை நோக்கி...! 

எப்போதும் நம் சிந்தையெல்லாம் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்றால், நம்முடைய பாசிட்டிவ் பாய்ண்ட்ஸ் மற்றும்  நாம் யார் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்து, கண்ணாடி முன்னாடி நின்று அந்த வார்த்தைகளை சத்தமாக பேசி பாருங்கள்....

முதலில் நமக்கு பிடிக்காது..ஆனால் போக போக நமது நம்பிக்கை கூடுவதுடன் நீ யார் உன்னுடைய சக்தி என்ன... நீ சாதிக்க பிறந்தவர் என்பதை உணர்வாய் என பல  வெற்றியாளர்கள் தெரிவிக்கும் ரகசியம் இதுதான்...

எனவே தனக்கு தானே பேசிக்கொள்வது என்பது தவறானது கிடையாது....

அதாவது எத்தனை பேர் நம்மை சூழ்ந்து இருந்தாலும் எப்போதுமே தனுக்கு தானே பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தால் தான் அது ஒரு விதமான பிரச்சனை என்று சொல்லலாம்..

மற்றபடி எப்போதாவது ஒருமுறை யாரும் இல்லாத சமயத்தில் அல்லது எல்லோரும் இருந்தாலும் பேசிக்கொள்வது என்பது ஆரோக்கியமானது தான்.