சர்க்கரை நோய்க்கு பல மருந்துகள் இருந்தாலும், உணவே மருந்தாக இருப்பதுதான் இதன் சிறப்பு. அந்த வகையில் சர்க்கரை வள்ளிக் கிழங்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உத்வுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரையை அதிகரிக்கும் என்பது தவறு என்கின்றனர் மருத்துவர்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் புரதம் நார்சத்து வைட்டமின் ஏ வைட்டமின் சி கால்சியம், இரும்புசத்து, மக்னீசியம் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது adiponectin என்ற ஹார்மோனை நன்கு சுரக்க செய்து  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. பொதுவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்துத்தான் சாப்பிடப்படுகிறது.இதனை வேறு சில வகையிலும் பயன்படுத்தலாம். 

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து கொண்டு, அவற்றுடன் வாழை பழத்தை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும். கடைசியாக இலவங்க பொடியை தூவி குடிக்கலாம். 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாலடும் நன்றாக இருக்கும். வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துண்டு துண்டாக நறுக்கி கொண்டு, வேகவைத்த கருப்பு பீன்ஸ் மற்றும் முளைக்கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். சிறிது உப்பை தூவி நன்கு கிளறி சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் முன் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் சர்க்கரையின் அளவு வேறுபாடும்.