உங்களுக்கு ரத்த அழுத்தமா..? செய்ய வேண்டியது இதை தான் ..! 

ஒரு குறிப்பிட்ட வயது நிரம்பிய உடன், வேலைப்பளு தேவை இல்லாத மன அழுத்தம், தொய்வு, அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு என  ஒவ்வொன்றாக உணர முடியும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் 40 அல்லது 45 வயதை தாண்டும் போது கண்டிப்பாக நமக்குள் ஒரு விதமான கட்டுப்பாட்டை கொண்டு வருவது நல்லது. அதன்படி, வயதான காலத்தில் காரம், சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் இவை அனைத்தயும் குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.

ஒரு வேலை ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்றால், உப்பு எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உப்பில் உள்ள சோடியம்  ரத்த நாளங்களை அதிக அளவில் பாதிப்படைய செய்து, ரத்த அழுத்தம் அதிகமாகி, சீரான ரத்த ஓட்டம் இல்லாமல் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

அதுமட்டுமல்லாமல் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. தினமும் யோகா செய்து வந்தாலும் நம் மனம் மற்றும் உடல் ஒரே பாதையில் சீராக இயங்க முடியும். 

ஆக மொத்தத்தில் உணவு கட்டுப்பாடு என்பது ஆரம்பம் முதலே கடைப் பிடிப்பது நல்லது. உணவு கட்டுப்பாடு என்றால், குறைவாக உண்ண வேண்டும் என்பது அல்ல பொருள். அதற்கு மாறாக எந்த உணவை, எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதில் உள்ளது விஷயம்.