Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு வியர்வை துர்நாற்ற பிரச்சனையா..? உணவில் இதை மட்டும் சேர்த்துக்காதீங்க.!

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். அதில் ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசுவது பெரும் பிரச்சனையாக இருக்கும். ஒரு சிலருக்கு வியர்வை நாற்றம் பெரும் தொல்லையாக இருக்கும். 
 

do you have bad odour in your body
Author
Chennai, First Published Mar 8, 2019, 1:16 PM IST

உங்களுக்கு வியர்வை துர்நாற்ற பிரச்சனையா..?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். அதில் ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசுவது பெரும் பிரச்சனையாக இருக்கும். ஒரு சிலருக்கு வியர்வை நாற்றம் பெரும் தொல்லையாக இருக்கும். 
 
உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது என்பது இயற்கையான ஒன்று. ஆனால் அவ்வாறு வெளியேறும் வியர்வை ஒரு சிலருக்கு பெரும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு என்ன காரணம் தெரியுமா..? நாம் உண்ணும் உணவுகள் தான் 

இறைச்சி

இறைச்சி செரிக்க அதிக நேரம் தேவைப்படும். இது குடலில் சில நச்சுக்களை விடுவிக்கிறது. இது வெளியிடும் பாக்டீரியா அதிக வியர்வையையும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்

பூண்டு

பூண்டை நசுக்கும்போதும், நறுக்கும் போதும் சல்ப்யூரிக் அமிலத்தின் மூலப்பொருளான அல்லிசின் என்னும் வேதிப்பொருளை வெளியிடுகிறது. இது பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து வியர்க்கும் போது மோசமான துர்நாற்றத்தை வெளியிடும். 

do you have bad odour in your body

மீன்

சமீபத்திய ஆய்வின்படி தொடர்ச்சியாக மீன் சாப்பிடுபவர்களுக்கு எப்பொழுதும் உடலில் ஒருவித துர்நாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் அதிலுள்ள டிரிமெதிலமைன். 

குறிப்பிட்ட காய்கறிகள்

முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் சல்பர் அதிகளவு உள்ளது. இது விரும்பத்தகாத வாசனையை உருவாக்கக்கூடிய ஒரு மூலப்பொருள். இந்த வகை காய்கறிகளை சமைக்கும்போது சீரகம், ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்றவற்றை சேர்த்து சமைக்கவேண்டும்.

காபி

உற்சாகத்தை ஏற்படுத்தும் காபி துர்நாற்றத்துக்கும் காரணமாகிறது. காபி குடித்தவுடன் வாய் உலர்ந்துவிடுவதால் பாக்டீரியாக்க வளரும் வாய்ப்புகள் அதிகரித்து பேசும்போதும், வியர்வையிலும் துர்நாற்றம் ஏற்படுகிறது

ஆல்கஹால் 

ஆல்கஹால் அருந்தும்போது அசிட்டிக் அமிலம் உருவாகிறது. இது வியர்வை மற்றும் பேசும்போது துர்நாற்றத்தை உருவாக்கும். 

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடிய கார்போஹைட்ரேட் குறையும்போது கீட்டோன் என்னும் நச்சுப்பொருள் உருவாகி துர்நாற்றம் ஏற்படுகிறது.

எனவே மேற்குறிப்பிட்ட உணவு முறைகளை கொண்டவர்கள் அதனை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. இல்லை என்றால் வியர்வையோடு துர்நாற்றம் வீசுவது உறுதி

Follow Us:
Download App:
  • android
  • ios