உப்பில்லாத பண்டம் :
“உப்பில்லாத பண்டம் குப்பையிலே “ என்ற பழமொழி அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு உப்பின் அருமை உண்டு. உப்பு இல்லாமல் எந்த உணவையும் நம் வாயில் கூட வைக்க முடியாது என்பது உண்மை .
லட்சுமி கடாட்சம் :
செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள் என்பதால், லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது என்பதால், இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
கிரகப் பிரவேசம் :
எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை உப்பு ?
இத்தனை சிறப்பு வாய்ந்த உப்பை , அதாவது லட்சுமி தேவிக்கு உகந்த வெள்ளிக்கிழமை, உப்பை வாங்கினால், பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம் ....
