சென்னையில் கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி எது தெரியுமா..!! கேள்விபட்டு இருக்கிறீர்களா..?? இப்போது அது எப்படி இருக்கு தெரியுமா...!!

கருப்பர் நகரம் முழுக்க இருந்த கட்டிடங்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது பிரிட்டிஷ் அரசு.இடித்துத்தள்ள இயந்திரங்களோடு வந்து நின்ற  துரைமார்கள், மக்கள் பசி போக்க எவனோ ஒரு தனி மனிதன் செய்த சேவையின் அடையாளத்தை அழிக்க மனமின்றி திரும்பினர்.

do u no kanchi thotti hospital in chennai

மற்ற நகரங்களைப்போல் அல்லாமல்,  கால ஒட்டத்தில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு பரிணமிக்கும் நகரம் சென்னை என்றால் அது மிகையல்ல, தான் உருமாறிய  தடத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்,  இன்னும் பல நூறு வரலாற்று தடயங்களை அடைகாத்து வைத்திருப்பதே தான் நம் சென்னையில் அழகு, பெருமை. சென்னை பற்றியும் இதுவரை நாம் கேள்விப்பட்டிராத வரலாற்று சிறப்புகள் பற்றியும் மூத்த பத்திரிக்கையாளர் சமரன் தொடர்ந்து கட்டுரையாக வெளியிட்டு வருகிறார். அதில், 

do u no kanchi thotti hospital in chennai

வண்ணாரப்பேட்டை. பஞ்சமும், போரும் மக்களை கொத்து கொத்தாக கொன்றுக்கொண்டிருந்த காலகட்டம். பசியால், பஞ்சத்தால் மடிந்து வரும் மக்களை கண்டு கலங்கி நின்ற மனிதனொருவன் கஞ்சித்தொட்டி வைத்தான். அந்த வீட்டில் எந்நேரமும் அடுப்பெரிந்து உலைக்கொதிக்க, தொட்டிகளில் ஊற்றப்படும் கஞ்சியினை அள்ளிக்குடித்து பசியாறினர் மக்கள்.வரலாறு எப்பொழுதும் கட்டிடங்களின் அழகும், கலையும் பதிவுசெய்துக்கொள்கிறதே தவிர அதன் பின் நின்று உழைத்தவர்கள் குறிப்புகளை ஒதுக்கிவைத்து விடுகிறது. அப்படியாகதான் அந்த பெரிய மனிதனின் பெயரும் வரலாற்று குறிப்புகளில் வரவு வைக்கப்படவே இல்லை.வரலாற்றை போலொன்றும் இங்கிதம் கெட்டதல்ல காலம். அது அவனை ‘மணியக்கார முதலியார்’ என்று கணக்கு வைத்திருக்கிறது.ஊருக்கே ஆக்கிப்போட,  இதென்ன சத்திரமா? சாவடியா? என்கிறோமே.. அப்படிதான் தோட்டத்து வீடு ‘சத்திரம்’ என்று அழைக்கப்போய், அதுவே, ‘மணியக்கார சத்திரம் சாலை’ என்றழைக்கப்பட்டது. 

do u no kanchi thotti hospital in chennai

சென்னையை ஐதர் அலியும், திப்பு சுல்தானும் கைப்பற்றிவிடுவார்களோ என்ற பயம் வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது. மெட்ராஸ்சில் வந்து பதுங்கி அவர்கள் கோட்டையைத் தாக்கக்கூடும் என அஞ்சியவர்கள் மெட்ராஸ் முழுக்க அதாவது கருப்பர் நகரம் முழுக்க இருந்த கட்டிடங்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது பிரிட்டிஷ் அரசு.இடித்துத்தள்ள இயந்திரங்களோடு வந்து நின்ற 
துரைமார்கள், மக்கள் பசி போக்க எவனோ ஒரு தனி மனிதன் செய்த சேவையின் அடையாளத்தை அழிக்க மனமின்றி திரும்பினர்.

do u no kanchi thotti hospital in chennai

மணியக்கார சத்திரம் சாலை எனும் அழகு தமிழ் பெயர் வழக்கம் போல் ஆங்கிலேயரால் கடித்து குதறி ‘மோனிகர் சவுல்ட்ரி ரோடு' என்று சிதைக்கப் பட்டது. சவுல்ட்ரி என்றால் ஆங்கிலத்தில் சத்திரம் என்பது பொருள். சொல்லப்போனால் Choultry கூட ஆங்கில மொழிக்கு தமிழ் போட்ட பிச்சைதான். அதாவது வழிப்போக்கர்கள் தங்கும் இடத்திற்கு தமிழில் சாவடி என்று பெயர். அதைதான் ‘சவுல்ட்ரினு’ பேசி திரிகிறார்கள்.விஷியத்திற்கு வருவோம். 

do u no kanchi thotti hospital in chennai

அந்த மணியக்காரர் சத்திரம் ஆங்கில குறிப்புகளில் ‘மோனிகர் சவுல்ட்ரி என இருக்க, நம்மாளுங்க தமிழ் படுத்துறேன் பேர்வழினு ‘மாணிக்கர் செளத்திரி’  ஆக்கிவைச்சுட்டாங்க. இப்ப அதுக்கு எம்.சி., சாலை என்று பெயர் சரி அந்த சத்திரம் என்னாச்சு ? மணியக்காரர் சத்திரத்தில் ஒரு மருத்துவமனை ஆரம்பித்தால் என்ன? .. யோசித்த டாக்டர் அண்டர்வுட் அதனை சூட்டோடு சூட்டாக செய்தும் முடித்தார். ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’ என அழைக்கப்பட்ட அதுதான் இப்போது.. ஸ்டான்லி மருத்துவமனை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios