வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும்   

பெயர் பலகை 

வீட்டு உரிமையாளர் என்ற முதற்தகவலை நம் வீட்டிற்கு வரும் அனைவரும் பார்க்கும் வகையில், வாசலில் பெயர் பலகை வைப்பது நல்லது. இவ்வாறு வைப்பதன் மூலம் நாம் தான் வீட்டின் உரிமையாளர் என்ற, அந்த உணார்வு மற்றவர்கள் மனதில் வரும்போது அது நமக்கு பாசிடிவ் எனர்ஜியாக மாறி விடுகிறது. 

தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் வீட்டில் விளக்கேற்றி வழிப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை நம்மால் உணர முடியும். மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம் போன்ற சின்னங்களை பூஜை அறையில் வைத்து வணங்கி வரும் போது மேலும் வளம் வரும். 

மிக முக்கியமான நாள் சனிக்கிழமை

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று, பூஜை செய்து ஒரு எலுமிச்சை பழத்தை ஒரு டம்ப்ளரில் வைத்து வந்தால் நம் வீடு மற்றும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மீதான கண் திருஷ்டி விலகி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று வாரம் ஒரு முறை, ஒரு எலுமிச்சை பழத்தை மாற்றி வைப்பதும் நல்லது.  

கங்கை நீர் கொண்ட கலசம்

வீட்டு பூஜை அறையில் கங்கை நீர் கொண்ட கலசம் வைத்து வணங்கி வந்தால், அனைத்து விதமான கெட்ட சக்திகளையும் அகற்ற முடியும்...நீங்கா வளம் வந்தடையும். வீடு பரிசுத்தமானதாக விளங்கும். 

தீயசக்திகளை துரத்தும் உப்பு...! 
 
மேட்டர் என்ன தெரியுமா..? உப்பை எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்பது தான்...

அதாவது வீட்டு அறையின் மூலைகளில், அது ஒரு மூலையாக வைத்தாலும், நான்கு மூலையில் வைத்தாலும் சரி...சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிரப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உப்பை  வைத்து வந்தால், தீய சக்திகளை அறவே கிரகித்து கொள்ளும். இந்த உப்பை தேவைப்படும் போது, மாற்றி வேறு உப்பை வைத்துக்கொள்ள வேண்டும்.

சமையலறை திசை

வீட்டில் எப்போதும், தென்கிழக்கு மூலையில் சமையல் அறை வைப்பது ஆக சிறந்தது. ஒரு வேளை அவ்வாறு வைக்க முடியவில்லை என்றால், வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம்.

வடமேற்கு திசையில் சமையல் அறை வைத்திருந்தால், அட்லீஸ்ட் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைப்பது மிகவும் நல்லது.