divorve is the end point? no

டைவர்ஸ் தான் முடிவா என்ன ?

திருமண வாழ்க்கை

திருமணம் என்பது இரு மனங்கள் இணைவதே. இரு மனங்கள் இணைந்தால் தான் அது திருமணம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமணம் நடந்த பின், அதே மகிழ்ச்சி நீடிக்கிறதா என்றால் சற்று கேள்விக்குறியாகி விடுகிறது . கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு , ஈகோ , சின்ன சின்ன சண்டைகள் என இதெல்லாம் காரணமாக அமைந்துவிடுகிறது தம்பதிகள் பிரிவதற்கு ...!

கணவன் குறித்த எதிர்மறை எண்ணங்களை மனைவி நினைப்பதும் , மனைவி குறித்த எதிர்மறை எண்ணங்களை கணவன் நினைப்பதும் , பின்னர் வாய்த்தகராறு முற்றி பிரச்சனையில் முடிகிறது .

இதற்கு அடுத்தகட்டமாக , கணவன் மனைவி இடையே உள்ள , பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக ஒரு பஞ்சாயத்து வேற. இதையெல்லாம் கடந்தாலும் மீண்டும் உருவெடுக்கும் பிரச்சன்னை .

என்னதான் தீர்வு ?

தொடர்ந்து கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்துக் கொண்டே இருந்தால் எப்படி வாழ்கை நடத்துவது என நினைத்து, வக்கீலுக்கு வேலை குடுக்க ஆரம்பிக்கிறோம் .

எப்படியோ ஒரு வழியா செட்டில்மென்ட் நடக்கும் ,டைவர்ஸ் கிடைக்கும் .....இருவரும் இரு வேறு திசையில் பயணிக்க தொடங்க தயாராகுகிறார்கள் . இதற்கிடையில் அவர்கள் குழந்தைகளை பற்றி கூட கவலை பட நேரமிருக்காது , அந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள் .

இதிலிருந்து என்னப் தெரிகிறது ..?

கஷ்டமோ நஷ்டமோ ...... எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் தவறு செய்கிறோம். தவற்றை திருத்திக் கொண்டு மனம் போன போக்கில் செல்லாமல், தன் துணையுடன் பேசி , எதார்த்தமாக வாழ முடிவெடுப்பதே நல்லது .

 கணவன் மனைவி இருவரும் ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது அமர்ந்து பேசுங்கள். பணம் பணம் என பேசுவதற்கு கூட நேரமில்லாமல் ஓடி கொண்டே இருந்தால் , திருமண வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது என வெறுப்பு வர தொடங்கி விடும் . அதற்கான இடத்தை நாம் எப்பொழுதும் தரவே கூடாது .

மனதோடு ஒன்றி ,கடைசி வரை ஒன்றாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்