Asianet News TamilAsianet News Tamil

மொய் பணத்துக்கு கம்ப்யூட்டர் ரசீது - காதணி விழாவில் கலக்கல்... இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?

digital bill in madurai function
digital bill-in-madurai-function
Author
First Published Mar 12, 2017, 4:26 PM IST


தென்னிந்திய மக்களோட கலாச்சாரத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் , ஒரு சில முறைகள் என்றும் மக்களால் பின்பற்றப்படும் என்பதற்கான உதாரணம் தற்போது நடந்துள்ளது .

எந்த ஒரு விழாவாக இருந்தாலும் , அதாவது காதணி விழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகள்   அனைத்திற்கும் உற்றார் உறவினர்களை அழைப்பது வழக்கம் .

அவ்வாறு விழாவிற்கு வரும்உற்றார் உறவினர்கள் பலரும், தங்களால் இயன்றதை அன்பளிப்பாக “ மொய்” என்ற  பெயரில் பணத்தையோ  அல்லது சற்று விலை உயர்ந்த பொருளையோ கொடுப்பார் .

இதே  போன்று , மற்றவர்கள்  வீட்டு  விழாவிற்கு  செல்லும் போது, இதற்கு முன்னதாக அவர்கள் தங்கள் வீட்டு விழாவிற்கு  எப்படி மொய் செய்தார்களோ அதே போன்று அவர்களுக்கும் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்வாறு  செய்யப்படும் அன்பளிப்பு “மொய்“ சில சமயத்தில் மறந்துக்கூடபோகும் . ஆனால் தற்போது விஞ்ஞான  வளர்ச்சிக்கு ஏற்பவும் , 

டிஜிட்டல் இந்தியா  கனவிற்கு ஏற்பவும்  தற்போது மதுரை செக்கானூரணியில் இன்று நடந்த காதணி விழாவில் மொய் வைப்பதற்கு கம்ப்யூட்டரில் ரசீது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இதற்காக  தனியாக  ஒரு சாப்டுவேர் ரெடி செய்யப்பட்டுள்ளது  என்றால் பாருங்களேன்.

இதன் மூலம், யாரெல்லாம்   அன்பளிப்பு  கொடுத்துள்ளார்கள் , எவ்வளவு  பணம் கொடுத்துள்ளார்கள்  என  சுலபமாக  தெரிந்துக் கொள்ள முடியும் . அதுமட்டுமின்றி  நொடி பொழுதில்,  ஒட்டு மொத்தமாக  எவ்வளவு பணம்  அன்பளிப்பாக  கிடைத்துள்ளது என்பதையும்  தெரிந்துக் கொள்ள முடியும் .

இதன் மூலம்  கலாசாரம் பழக்க வழக்கங்கள் மாறமால் , அனைத்திலும் தொழில் நுட்ப  வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது  உறுதியாகிவிட்டது 

Follow Us:
Download App:
  • android
  • ios