வெவ்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் காதலர் தின கொண்டாட்டங்கள்... 

உலகம் முழுக்க பொதுவாக காணப்படும் விஷயம், 'காதல்' தான். காதலுக்கு பாலினமோ, மதமோ, சாதியோ, பொருளாதாரமோ தடையாக இருக்காது. இருமனங்கள் இணைந்த பிறகு மற்ற தடைகள் காதலர்களுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. இந்த கொண்டாட்டமான காதலை, கூடுதலாக கொண்டாடவே காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் எல்லா நாடுகளும் ஒரே மாதிரி காதலர் தினத்தை அணுகுவதில்லை. மற்ற நாடுகளின் கொண்டாட்டம் குறித்து இங்கு காணலாம். 

ஜப்பான் 

இந்த நாட்டு இளம்பெண்கள் பிப்ரவரி 14ஆம் தேதியில் விருப்பமான ஆண் தோழர்களுக்கு இனிப்புகளையும், பரிசுகளையும் கொடுத்து தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள். இதில் சுவாரசியம் என்னவென்றால் காதலை வெளிப்படுத்த ஒரு வகையான சாக்லேட்டுகளும், 'காதல் இல்லை, நீ தோழன் மட்டும்தான்' என்பதை வெளிப்படுத்தும் வகையான சாக்லேட்டுகளும் அங்கு பரிமாறப்படுகின்றன. இந்த தினத்தில் ஆண்கள் பரிசு பொருள்களை கொடுக்கமாட்டார்களாம். அதற்கு பதிலாக மார்ச் 14ஆம் தேதி அன்று அந்நாட்டு ஆண்கள் காதலர் தினம் கொண்டாடுகின்றனர். 

தென் ஆப்பிரிக்கா 

இங்கு அன்பின் அடையாளமாக பூங்கொத்துக்களை கொடுத்து காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, அன்றைய தினம் பெண்கள் காதலர்களின் பெயரை ஆடைகளில் பதிக்கும் வழக்கமும் உள்ளது. 

பிலிப்பைன்ஸ் 

இந்த நாட்டில் பிப்ரவரி 14-ஆம் தேதியில் காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்காக காதலர்கள் இணைந்து நல்லதொரு இடத்தை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 

சீனா 

இந்த நாட்டில் ஏற்கனவே `கியூஸி' திருவிழா கொண்டாடப்படுகிறது. இது காதலர் தினத்திற்கு இணையாகவே அங்கு கருதப்படுகிறது.இது அந்நாட்டு காலண்டர்படி, ஆகஸ்டு மாதம் வருகிறது. அன்றைய தினம் இளம்பெண்கள் ஜினு என்ற தெய்வத்திற்கு பழங்களை படையலிட்டு நல்ல துணை கிடைக்க வேண்டிக்கொள்கிறார்கள். திருமணமானவர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். 

இங்கிலாந்து 

இங்கு காதலர் தினத்திற்கு முந்தைய தினமான பிப்ரவரி 13ஆம் தேதி இரவு இளம்பெண்கள் தலையணையில் ஐந்து பிரியாணி இலைகளை வைத்தபடி உறங்குகிறார்கள். தலையணையின் நான்கு மூலைகள், மத்திய பகுதியில் பிரியாணி இலைகளை வைக்கிறார்கள். இப்படி தூங்கினால் வருங்கால கணவனைப் பற்றிய கனவுகள் வரும் என நம்பப்படுகிறது. திருமணமானவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று பரிசுகளை பரிமாறி காதலர் தினம் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து உண்டபடி காதலை பரிமாறிக்கொள்வார்கள். 

தைவான் 

இந்த நாட்டில் நூதனமான பாரம்பரியத்துடன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி மட்டுமில்லாமல் ஜூலை 7ஆம் தேதியும் ஆண்கள் அழகான பூங்கொத்துகளை காதல் பரிசாக கொடுப்பார்கள். அதே சமயம் இளம்பெண் 108 ரோஜாக்கள் உடைய பூங்கொத்தை பரிசாக பெறுவாறானால், பூங்கொத்தை கொடுக்கும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் என்று புரிந்து கொள்ளவேண்டுமாம்.

பின்லாந்து 

இந்த நாட்டை பொறுத்தவரை காதலர் தினம் பொதுவானது. நண்பர்களுடன்தான் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் மொழியில் இந்த தினத்தை, 'நண்பர்களின் தினம்' என்றுதான் குறிப்பிடுகிறார்கள். 

அமெரிக்கா 

காதலர் தினம் இந்த நாட்டில் வணிகரீதியாக வெற்றி பெறும். ஏனெனில் காதலர்கள், திருமணமானவர்கள் என போட்டிப்போட்டு பரிசுகள் வாங்கப்படுகிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், சாக்லெட்டுகள், பூக்கள், நகைகள் என பரிசுகளை வாரி இறைக்கின்றனர். இதனால் அமெரிக்காவில் காதலர் தினத்தில் மட்டும் சுமார் 25 பில்லியன் டாலர்கள் வரை பணம் சுழலுகிறது. 

ஜெர்மனி 

இந்த நாட்டில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் சின்னம். அதனால் காதலர் தினத்தில் பன்றி சிலைகளை தான் பரிசாக கொடுக்கிறார்கள். மனம் கவர்ந்த அன்பர்களுக்கு பன்றி உருவம் பொறித்த பொம்மைகள், சிலைகளை கொடுப்பதுடன், சாக்லெட்டுகள், பூக்களையும் கொடுத்து மகிழ்கிறார்கள். 

இதையும் படிங்க: Promise day: ஷாலினி சொல்லுக்கு கட்டுப்பட்டு 21 வருஷம் தாண்டி அஜித் காப்பாத்திட்டு வர்ற சத்தியம் பத்தி தெரியுமா

இதையும் படிங்க: kiss day: காது மடலில் தொடங்கி கழுத்தில்... வாழ்வில் ஒருமுறையாவது இப்படி முத்தம் கொடுக்கணும்.. ஏன் தெரியுமா?