"சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்"..! மதுரையை கலக்கும் போஸ்டர்..! 

மதுரையில் அரசியல் பிரமுகர் ஒருவர் இறந்ததற்கு வித்தியாசமான முறையில் அவரது குடும்பத்தினர் போஸ்டர் ஒட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பேனர் கலாச்சாரம் என்பது பொதுவானதாக கருதப்படுகிறது. இருந்தாலும் சமீபத்தில் ஓர் அரசியல் பிரமுகரின் வீட்டில் நடைபெற்ற விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பேனர் கலாச்சாரம் சற்று குறைந்தது.

இந்த ஒரு நிலையில் இதற்கு மாற்றாக போஸ்டர் ஒட்டும் பழக்கம் மட்டும் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றது. அந்த வகையில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் முதல் இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு போஸ்டர் ஒட்டுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது மதுரை வடக்குமாசி பகுதியை சேர்ந்தவர் அடைக்கலம் என்பவர். இவர் 51 ஆவது வட்ட திமுக பிரதிநிதியாக இருக்கிறார். இவருடைய அப்பா பெயர் அய்யாவு. கடந்த 25ஆம் தேதி அதிகாலை காலமானார். இவருடைய இறப்பை தாங்க முடியாத குடும்பத்தினர் போஸ்டர் ஒட்டுவது ஒரு வித்தியாசமான பதிவை இட்டு உள்ளனர். அதில் சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம் என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் கீழ் வித்தியாசமாக சில அடைமொழி சேர்த்து பெயர் போடப்பட்டு உள்ளது.