வாஷிங் மெஷின் வாங்கும்போது இதை கவனிச்சுருக்கீங்களா?.. ஏன் அது கிலோ கணக்கில் கணக்கிடப்படுகிறது? முழு விவரம்!

நீங்கள் உங்கள் வீட்டுக்காக ஒரு வாஷிங் மெஷின் வாங்க செல்லும் பொழுதும் சரி, அல்லது அந்த வாஷிங் மெஷினில் உங்கள் வீட்டில் துணிகளை துவைக்கும்போது சரி, அது ஏன் கிலோ கணக்கில் கூறப்படுகிறது என்பது குறித்து எப்போதாவது யோசித்து உள்ளீர்களா? நிச்சயம் இதற்கான பதில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Did you know what is the meaning of kg mentioned in your washing machine full details

வாஷிங்மெஷின்களில் பல வகை உண்டு, பிரிண்ட் லோட் , டாப் லோட், செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக், மேனுவல் என்று பல வகைகள் இருக்கின்றது. அதேபோல அதே வாஷிங் மெஷின் 6 கிலோ, 6.5 கிலோ, 7 கிலோ, 8 கிலோ என்று பல வகை வகையான கிலோ கணக்கில் நமக்கு கிடைக்கிறது.

இன்றளவும் பலர் அந்த எடை குறியீடு என்பது, அந்த வாஷிங் மெஷின் மொத்த எடை என்றும், அல்லது அதனுடைய வகையை குறிக்கிறது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது முற்றிலும் தவறு.

துணி துவைக்கும் போது வாஷிங் மெஷினில் ஐஸ் போடுங்களே...அந்த அதிசயத்தை நீங்களே தெரிஞ்சிப்பீங்க..!!

உண்மையில் அந்த எடை கணக்கு என்பது நீங்கள் அந்த சலவை இயந்திரத்திற்குள் போடும் துணிகளின் எடையை தான் குறிக்கிறது. உதாரணமாக உங்களிடம் ஆறு கிலோ வாஷிங் மெஷின் இருந்தால் அதில் நீங்கள் ஆறு கிலோ வரையிலுமான துணிகளை ஒரே சலவையில் துவைத்துக் கொள்ள முடியும். 

ஆனால் எப்பொழுதும் சலவை இயந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த எடையையும் ஒரே சலவையில் பயன்படுத்தாமல், 70 முதல் 80 சதவீத துணிகளை பயன்படுத்தி நீங்கள் துவைத்துக் கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் எட்டு கிலோ எடை கொண்ட சலவை இயந்திரத்தை வைத்திருக்கும் நிலையில், அதில் எட்டு கிலோ துணிகளை போடாமல், அதற்கு மாறாக ஆறு முதல் ஏழு கிலோ எடை கொண்ட துணிகளை போட்டால், அது ஒரே சலவையில் அதை நன்கு சுத்தம் செய்யும். 

அதே சமயம் உங்கள் சலவை இயந்திரத்தை அளவுக்கு அதிகமான அளவில் பயன்படுத்தும்போதும், அதனுடைய ட்ராமில் பழுது ஏற்படுகிறது. இது நாளடைவில் உங்கள் எந்திரத்தை பழுதாக்கும். 

உங்கள் துணை உங்களை உண்மையிலேயே காதலிக்கிறாரா? - இந்த சில விஷயங்கள் உண்மையை காண்பித்துவிடும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios