கொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு "அறிகுறி"..! வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்! 

கொரோனா பாதித்தவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருப்பது தான் சாதாரணமாக காணப்படும் அறிகுறிகள் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை எல்லாம் தாண்டி மற்ற சில அறிகுறிகளும் கொரோனா பாதித்தவர்களுக்கு இருந்துள்ளது.

ஆம், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி ஒரு ஆய்வு கூறுகிறது. 2020 ஜனவரி 18 முதல் பிப்ரவரி 28 வரை சீனாவின் ஹூபேயில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட நோயாளிகளை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது  

மேலும் அவர்களில் பாதி பேர் (50.5%), பசியின்மை (78.6%) உள்ளிட்ட செரிமான அறிகுறியை கொண்டுள்ளனர். வயிற்றுப்போக்கு (34%), வாந்தி (3.9%), வயிற்று வலி (1.9%) அறிகுறியோடு இருந்துள்ளனர்.

நியூயார்க்கின் லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையின் அழற்சி குடல் நோய் சிறப்பு டாக்டர் அருண் சுவாமிநாத் தெரிவிக்கும் போது “கோவிட் -19, "அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி" போன்ற பிரச்சனை கொண்டவர்களுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என தெரியவில்லை என குறிப்பிட்டு உள்ளார் 

சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில், ஒரு நோயாளி “3 நாட்களாக வயிற்றுப்போக்கு உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அவருக்கு காய்ச்சல் குறைவாக மட்டுமே இருந்துள்ளது

இதேபோன்று தைவானின் மத்திய தொற்றுநோய் கட்டளை மையம் (சி.இ.சி.சி) மேற்கொண்ட ஆராய்ச்சியில், கோவிட் -19 நோயாளிகளில் பலருக்கும் ஒரு நாளைக்கு எட்டு முறைக்கு வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. எனவே கொரோனா பாதித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கும் ஓர் அறிகுறியாக உள்ளது.