நம்பர் 1 அழுத்துங்க...! ஸ்கிப் ஆகும் "லொக்கு லொக்கு இருமல் சவுண்டு"...! 

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று மாலை குறும்படமும் வெளியிடப்பட்டது. 

அதில் நாம் எப்படி நடந்து கொள்ளுதல் வேண்டும், தன்னை எப்படி தூய்மையாக பேணிக் காத்தல் வேண்டும், வெளியில் செல்லும் போது எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்த முழு விவரம் இருக்கின்றது. இந்த ஒரு தருணத்தில் அனைவருக்கும் மிக எளிதாக இதுகுறித்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டும் என்பதற்காக நம் கைபேசியில்  யாருக்கு போன் செய்தாலும் ரிங் டோனுக்கு பதிலாக கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அடங்கிய வாசகம் ஆங்கிலத்தில் வருகிறது.

சுமார் 30 நொடி இந்த வாசகம் நீள்கிறது. ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே அது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. மற்றபடி தாய்மொழி கற்றவர்கள், தாய்மொழி மட்டுமே தெரிந்தவர்கள் கொரோனா பற்றி ஆங்கிலத்தில் வரக்கூடிய வாசகத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. குறிப்பாக அந்த வாசகம் தொடங்கும்போது தொடக்கத்திலேயே லொக்கு லொக்கு என இருமல் சப்தத்துடன் தொடங்குகிறது விழிப்புணர்வு வாசகம். இதன்காரணமாக யாராக இருப்பினும் மிக அவசரமாக மற்றங்களுக்கு போன் செய்தாலும் 30 நொடிகள் காத்திருப்பதால் எரிச்சல் அடைகின்றனர்.

அதாவது, கொரோனா பெரிய விழிப்புணர்வு சில முறை கேட்டதில் மனதில் பதிந்தாலும், ஒவ்வொரு முறையும் அதையே கேட்டு இருப்பதால், சற்று எரிச்சல் ஏற்படுகிறது என மக்கள்  தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கு ஒரு மாற்றாக அவ்வாறு நாம் போன் செய்யும் போது, லொக்கு லொக்கு இருமல் தொடங்கும்  போதெ  எண் 1 அழுத்தினால், நேரடியாக  நாம் யாருக்கு  அழிக்கிறோமோ அவர்களுக்கு ரிங் வருகிறது. எனவே இதனை  முயற்சி  செய்து பார்க்கலாம். அதே வேளையில், கொரோனா வைரஸ் குறித்த நம் அனைவருக்கும் கட்டாயம் தேவை.