Asianet News TamilAsianet News Tamil

மூனே மூனு அடி தான்... நெனைச்சதெல்லாம் நடக்குமாம்..!

 நாமக்கல் மாவட்டத்தில் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி பெற்றுக்கொள்வது ஐதீகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Devotees get thrashed to worship Goddess in Temple Carnival
Author
Tamil Nadu, First Published Nov 5, 2019, 12:39 PM IST

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதனைப் பொருத்து ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விசயத்தில் பிரசித்தி பெற்றதாக இருக்கும். 


அப்படித்தான் நாமக்கல் மாவட்டத்தில் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி பெற்றுக்கொள்வது ஐதீகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ள அத்திபலகானுர் மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் திருவிழாவில் பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வருதல், உருளுதண்டம் போடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து நோய் நொடியில்லா வாழ்க்கையையும், நினைத்தது நிறைவேறவும் பூசாரி கையால் 3 முறை சாட்டையால் அடி வாங்கும் நிகழ்வு நடந்தது. 

அத்தபலகானூர் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த அக்.20-இல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சாட்டையடி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும், பெண்கள் திருமணம் கைகூடவும், திருமணமானவர்கள் குழந்தை வரம் வேண்டியும், பேய் பிடித்தல், காத்து கருப்பு நீங்கவும், தொழில் விருத்தி அடையவும் வேண்டுதல் நடத்தி கோயில் பூசாரி கையில் சாட்டையால் அடி வாங்கினர்.

 இந்த வழக்கம் காலங்காலமாக இக்கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கோயில் முன் உருளுதண்டம் போட்ட பெண்கள் மீது சுவாமி வந்த மூதாட்டி ஏறி மிதித்து நடந்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாட்டையடி பெற்றுக்கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios