டெங்குவிலிருந்து மீள கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டது எப்படி..? பகிர்ந்துக் கொண்ட அனுபவங்கள்..! 

இன்றைய காலங்களில் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்று டெங்கு. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரப்படி 2019 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் 5500 க்கும் அதிகமாக நபர்கள் பாதிக்கப்பட்டு கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

தற்போது டெங்கு பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களில் ஒருவர், நோய் தாக்கத்தின் போது அவர் அனுபவித்த இன்னல்கள் மற்றும் எப்படி இந்த நோயை எதிர்கொண்டார்கள் என சுவர்ணா செய்தி பதிவு செய்தது.

“நான் நன்றாக தான் இருந்தேன், திடீரென ஒரு நாள் இரவில் எனக்கு காய்ச்சல் வர ஆரம்பித்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு காய்ச்சல் இல்லை. பின்னர் எனக்கு பயங்கர தலைவலி ஏற்பட்டது. என்னால் எழுந்து உட்கார கூட முடியவில்லை. மருத்துவமனையில் முழுமையான பரிசோதனைக்கு பின்னர், எனக்கு டெங்கு இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முதல் 1-2 நாட்களுக்கு எனக்கு எதுவுமே தெரியவில்லை. அதிக காய்ச்சல் காரணமாக எதையும் உணர முடியாமல் தவித்தேன். ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறைய தொடங்கியது. அந்த ஒரு தருணம் மருத்துவர்களுக்கே பெரும் சவாலாக அமைந்தது. நான் பாதிக்கப்பட்டது போல வேறு யாரும்  பாதிக்கக்கூடாது. தயவு செய்து நம்மை சுற்றி உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமலும் கொசு உற்பத்தி இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். 

“என் தொடர்ச்சியான காய்ச்சலுக்கு காரணம் டெங்கு என மருத்துவர்கள் என்னிடம் சொன்னபோது, நான் திகிலடைந்தேன். ஆனால் அது என் கஷ்டங்களின் ஆரம்பம் மட்டுமே. எனது பிளேட்லெட் எண்ணிக்கை வீழ்ச்சியடைய தொடங்கி 20000 ஐ அடைந்தது.பின்னர் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க 5 முறை உடலில் பிளேட்லெட் செலுத்தப்படவேண்டியிருந்தது. இதன் விளைவாக 5000 வரை எண்ணிக்கை மெல்ல அதிகரித்து மீண்டும் குறைந்தது. இந்த ஒரு தருணத்தில் என் பெற்றோர் பெங்களூரில் இல்லை. என் நண்பர்கள் எனக்கு பிளேட்லெட் கிடைக்க பெற மிகவும் கடினமாக முயற்சி செய்தனர். இடை இடையே நான் மயக்கத்தில் இருந்தேன். என் உயிர் காக்க நண்பர்கள் பெரும் முயற்சி செய்து பிளேட்லெட் பெற்றனர். அவர்களின் போராட்ட முயற்சியை பார்க்கும் போது எனக்கே மிகவும் வருத்தமாகவும் குற்ற உணர்வும் இருந்தது.

எனது பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்க கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆனது. பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியபின் இந்த தாக்குதலில் இருந்து மீள 1 மாதம்  ஆகிவிட்டது. இத போன்று யாரும் பாதிக்க கூடாது என நான் எண்ணுகிறேன். இது குறித்த விழிப்புணர்வு இருந்திருந்தால் முன்னதகவே தடுத்திருந்திருக்க முடியும் 

டெங்குவிலிருந்து மீண்டு வந்தவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட இந்த அனுபவங்களை வைத்து பார்க்கும் போது "ஒரு கொசு கூட ஆபத்தானது என்பதை காட்டுகிறது.டெங்கு பரவாமல் தடுக்கவும், கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் விரைவாக நடவடிக்கை எடுப்பது தான் மிக சிறந்தது.