பருவமழை காலத்தில் மட்டும் வருவது அல்ல டெங்கு... எப்போது வேண்டுமானாலும் வரலாம்..!

கொசுக்கடியால் வரக்கூடியது தான் டெங்கு. இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் கூட டெங்கு பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு மே 26 வரையிலான கணக்கீட்டின் படி, இந்தியாவில் 5500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பதிவாகி உள்ளது. அதில் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் அதிக  எண்ணிக்கையிலான நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ரெக்கார்ட் பதிவாகி உள்ளது.

இந்த கொசு அச்சுறுத்தலைப் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் மழைக்காலத்தில் தான் டெங்கு பெரும்பாலும் ஏற்படுகிறது என்ற தவறான கருத்து உள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறையும். பிளேட்லெட் குறைவதால் ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு முடிவில் உயிரிழப்பு கூட ஏற்படலாம். 

2019 ஆம் ஆண்டில், டெங்கு காரணமாக 5 பேர் இறந்துள்ளதாக பதிவாகி உள்ளது. எனவே, இந்த நோய் மழைக்காலத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது

எனவே கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொதுவாக மழைக்காலங்களில் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். எனவேதான் இந்த காலகட்டத்தில் டெங்கு மிக வேகமாக பரவுகிறது. ஆனால் மழை காலத்தில் மட்டும் தான் டெங்கு பரவும் என்ற சிந்தனை இருக்கக் கூடாது. காரணம் மழைக்காலம் முடிந்தவுடன் தேங்கியிருக்கும் மழைத்தண்ணீரில் டெங்கு வைரஸ் இருக்கும். எனவே அதிக வெயில் நிலவும் கோடை காலத்தில் கூட டெங்கு தாக்கலாம்

சுற்றிலும் சரிபார்க்கவும்

டெங்கு தாக்குதலை கட்டுப்படுத்த முதலில் நம்மை சுற்றி உள்ள இடங்களில் எங்கும் தண்ணீர்  தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக டயர்கள்,வாளிகள் அல்லது கழிவுப்பொருட்களில் கொசுக்கள் அதிகம் தங்கி இருக்கும். 

அன்புக்குரியவர்களை பாதுகாக்க வேண்டும் அல்லவா.?

வயது வித்தியாசமின்றி டெங்கு யாரையும் பாதிக்கும். உங்கள் குழந்தைகளை முழு சட்டை அணிய வைப்பது நல்லது. மேலும் முறையான இடைவெளியில் கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம்.

டெங்கு பரப்பும் ஒரு கொசு கூட ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். டெங்கு அல்லது மலேரியா அபாயத்தை ஏற்படுத்தலாம். எனவே இதனை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.