தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிகம் மக்கள் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் மற்றும் மிக முக்கியமாக ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளேட்லெட் உடலினுள் செலுத்த வேண்டியது அவசியம் 

இதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற, கோத்ரஜ் HIT மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து, இதற்காக தனி இணையதள பக்கத்தை உருவாக்கி, வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து உள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் உதவியை நாட 7878782020 என்ற எண்ணை அழைக்கலாம்.

ரத்த அணுக்கள் வழங்குவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பாக, ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். ஓரிரு நாட்களில் மிக விரைவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதால் உடலில் பல்வேறு பகுதிகளிலிருந்து ரத்தம் வெளியேற துவங்கும்.

அதிலும் குறிப்பாக ரத்த அணுக்களின் எண்ணிக்கை 20,000 / cu.mm - கும் குறைவாக செல்லும்  போது,  டெங்குவால் பாதிக்கப்பட்டவருக்கு கட்டாயம் பிளேட்லெட்  உடலினுள் செலுத்தவேண்டும். இல்லையென்றால் ஆபத்தில் முடிய வாய்ப்பு உள்ளது.

பிளேட்லெட் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம்...இது சாதாரண ரத்தம் போன்று எளிதில் கிடைப்பதில்லை. ஒருவரிடம் இருந்து பெற்ற பிளேட்லெட்டை 5  நாட்களுக்கு மேல் பாதுகாக்க முடியாது. இதையெல்லாம் மீறி ஒரு சவாலாக டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க, அவரசரீதியில் பிளேட்லெட்டை வழங்குகிறது கோத்ரஜ் HIT.

மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உயிரை பாதுகாக்கவும், இதற்கென பிரத்யேகமாக பிளேட்லெட் வழங்க, தன்னார்வலர்கள் கொண்ட ஒரு இணையதளம் இயங்கி வருகிறது.

"பிளேட்லெட்" பெற உதவி எண்: 7878782020

கோத்ரெஜ் HIT  மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து உருவாக்கிய பிளேட்லெட் டோனர்ஸ் கொண்ட இணையதள பக்கத்தில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேலான  தன்னார்வலர்கள் உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக தற்போது அவசரமாக பிளேட்லெட் தேவைப்படுபவர்களின் அவசர அழைப்புக்கு 7878782020 என்ற எண்ணை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த முறை சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய முக்கிய பெருநகரங்களில் அமலில் உள்ளது.

தேவைப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து முன் பதிவு செய்து கொள்ளலாம். டெங்குவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் உயிர் காக்க தாயார? பிளேட்லெட் வழங்க இந்த இணைய பக்கத்தை கிளிக் செய்யுங்க...! #HitDengueBack

http://m.godrejhit.com/trackthebitedesktop/