தலைக்கு டை அடிப்பவரா நீங்கள்..? "லோரியல்" க்ரீம் பயன்படுத்தியதால் நடந்த விபரீதம் பாருங்கள்..!

தலைமுடிக்கு டை அடித்து, அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தீபா மேனன் என்பவர் என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்களேன்..

கேரளாவை சேர்ந்தவர் தீபா மேனன். இவர் கடந்த கடந்த15 வருடங்களாகவே தலை முடிக்கு டை அடித்து வந்துள்ளார்

ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இவர், கடந்த வாரம் லோரியல் நிறுவன தயாரிப்பான "லோரியால் ட்ரிப்பில் க்ரீம் எச்சலன்ஸ் பிளாக்" என்ற பிராடக்டை பயன்படுத்தி உள்ளார்.

பிறகு அன்றையப் தினத்திலேயே, தலையில் ஒருவிதமா எரிச்சல், நமிச்சல் ஏற்பட்டு உள்ளது. போதாதற்கு ஒரு விதமான வாசனை தொடர்ந்து வந்துள்ளது

பிறகு அடுத்த இரண்டு நாட்களில், நெஞ்சரிப்பு பின்னர் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது

இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளான தீபா, ஒரு கட்டத்தில் தன் தலை முடியை கிராப் செய்துள்ளார். அப்படியாவது பிரச்சனை குறைகிறதா என்று..ஆனாலும் அவருக்கு விடாமல் இந்த பிரச்சனை இருந்துள்ளது.

பின்னர், திடீரெ நெஞ்செரிச்சல் அதிகமாகி, மூச்சு விட திணறி உள்ளார் தீபா. இவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு அவருக்கு உடனடியாக முடியை முழுவதும் எடுத்து, பின்னர் அவருடைய ரத்த மாதிரியை சோதனை செய்து முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

சாதாரண டை இன்று அவருக்கு உயிருக்கு உலை வைக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை பாதிக்கப்பட்ட பெண்ணான தீபா மேனன் வெளியிட்டு உள்ளார்.