மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள், சிகிச்சை பெறுபவர்களின் அறையில் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

 நேற்றுமட்டும் மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 10பேர் இறந்து போனதாக செய்தி வெளியானது.மதுரையில் கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த இருவரின் உடல், சிகிச்சை பெற்று வருபவர்களின் அறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் சிகிச்சையில் இருந்த ஒரு நோயாளி தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்தார் இந்த செய்தி மருத்துவமனை நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனே மருத்துவர்கள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.மதுரை ராஜாஜி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிப்பவர்களுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிகிச்சையில் இருக்கும் ஒருவர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணனுக்கு போன் செய்து.. அங்கு நடக்கும் அலட்சியங்களை சொல்லும் ஆடியோ வெளியாகி இருக்கிறது.இறந்தவர்களின் உடல்களை உடனே அகற்றாமலும் இறந்தவர்களின் படுக்கைகளை கிருமி நாசிக் கொண்டு சுத்தப்படுத்தவதில்லை. மேலும் கொரோனா வார்டில் உள்ள கழிப்பறைகள் சுத்தப்படுத்தப்படுவதில்லை என்று புகார்கள் எழுத்திருக்கிறது.

இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவமனை டீன் சங்குமணி, இறந்தவர்கள் கொரோனாவால் தான் இறந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியாது எனவும், இருப்பினும் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவமனை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.