தற்போது  தமிழகத்தில் டெங்கு மற்றும்  பன்றிக் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இது தவிர மர்ம காய்ச்சலால் சிலர் உயிர் இழக்கின்றனர். டெங்கு காய்ச்சல் வந்தால், நம் உடம்பில் நீர் சத்துக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. அதன் விளைவு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அல்லவா..?  

தட்டணு (pletlet) செல்கள், மினிமம் மூன்று லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் செங்கு காய்ச்சல்  வந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை  இருபத்தைந்து ஆயிரத்திற்கு கீழ் குறைவதால், ரத்த உறைதல்  தடைப்பட்டு உயிர் இழப்பு நேரிடும். 

இதனை தடுக்க நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்று பார்க்கலாம்..!

1. சீரக தண்ணீர்

சீரகத்தை தண்ணீரில் போட்டு, கொதிக்க விட்டு, ஆற வைத்து பருக வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். சரியான நீர் சத்து உடலில் இருக்கும். மேலும் நல்ல முறையில் ஜீரணம் நடைப்பெறும்   

2. உலர் திராட்சை 

உலர் திராட்சை நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இதை தினமும் நான்கு வேலை அதாவது, காலை, மதியம், மாலை, இரவு என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி, சாப்பிடவும்.

இவ்வாறு நாம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, சீராக வைத்துக் கொள்ளும். மேலும் டெங்கு உள்ளிட்ட பல வைரஸ் காய்ச்சலுக்கு ஒரு தீர்வாக அமையும். எந்த காய்ச்சல் வந்தாலும் அதனை கிட்டவே அண்ட விடாது  நம்மை காப்பாற்றும். இதனை நாம் பின்பற்றுவதால் கண்டிப்பாக நம்மை  காப்பற்றிக்கொள்ள முடியும்.