சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு இது சரியான நேரம் என்பதால், பல்லாயிரகணக்கான பக்தர்கள் , தற்போது மாலை அணிந்து கோவிலுக்கு சென்று வருகிறார்கள்....

அவ்வாறு கோவிலுக்கு செல்லும் போது, பொதுவாக கோவிலுக்கு செல்பவர்கள் , உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்..... 

இந்நிலையில் நாடு முழுவதும் பணப்பிரச்சனை உள்ளது நாம் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில், ஐயப்பன் கோவிலில் உள்ள சோபனம் பகுதிக்கு இடது புறம் ஈ-உண்டியல் வசதிக்கான கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வேலை நேரம் முழுவதும் இந்த வசதி செயல்படும். நீங்கள் உங்கள் கார்டை ஸ்வைப் செய்தவுடன்,நீங்கள் செலுத்திய தொகைக்கான இரண்டு ரசீதுகள் வரும்.அதில் ஒரு ரசீதை உண்டியலில் செலுத்திவிடலாம்.மற்றொன்றை நீங்கள் கொண்டு செல்லலாம்.

இந்த வசதி மூல, அனைத்து விதமான, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி , உண்டியலில் காணிக்கை செலுத்தலாம் என்பது குறிபிடத்தக்கது.