என்னது... இத்தனை நாட்களாக தாம்பத்யமே  இல்லையா..? டேன்ஜர் ஜோனில் இருக்கும் கணவன் மனைவி..!

கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருகிறது என்றால், அதற்கு முதல் காரணம் தாம்பத்ய உறவில் இருக்கும் சிக்கல் தான். கடைசியாக உங்கள் துணையுடன் நீங்கள் உடலுறவில் ஈடுபட்டது எப்போது என்று யோசியுங்கள். எப்போது நடந்தது என்று உங்களுக்கு ஞாபகத்துக்கு இல்லையா? சரி, இது உங்கள் உறவு தவறான வழியில் செல்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். 

இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசித்தாலோ, உங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ பல நாட்கள் உடலுறவு கொள்ளாத சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால் ஒரே படுக்கையில் இருந்தும் இது தொடர்கிறது என்றால் உடனே முற்றுப்புள்ளி வைப்பது தான் ஒரே தீர்வு. 

பேசி தீர்வு காணுங்கள்

தாம்பத்ய வாழ்க்கையை புதுப்பிக்க , இருவரும் எந்த ஈகோவும் இல்லாமல் மனம்விட்டு பேச வேண்டும். செக்ஸ் இல்லாத நாட்கள் எப்படி இருக்கிறது என பேசி, அதற்கான தீர்வை கண்டுப்பிடிக்க வேண்டிய நேரம் இது. 

தவறான புரிதல்களை சரிசெய்யுங்கள்

உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், அவற்றை வரிசைப்படுத்தி புதிய தொடக்கத்தை மேற்கொள்வது நல்லது. உங்கள் காதலை சைகள், முத்தங்கள், உங்களுக்கு மட்டும் புரியும் ஸ்பெஷல்  வார்த்தைகளால் அடிக்கடி வெளிப்படுத்துங்கள். உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பதை அவர்களது கண்ணை பார்த்து சொல்லுங்கள். 

டேட்டிங் செல்லுங்கள்

உங்களையும் உங்கள் துணையையும் மீண்டும் ஒரு முறை கண்டுபிடியுங்கள். இருவரும் ஒன்று சேர்ந்து அதிகம் வெளியே செல்ல இடத்தை தேர்ந்தெடுங்கள். காபி ஷாப், பூங்கா, தியேட்டர், பீச் எதுவாக இருந்தாலும் அது முழுக்க முழுக்க உங்களுக்கான நேரம் என்பதை மறவாதீர்கள். இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நாட்களில் எப்படி இருந்தீர்கள் என்பதை நினைவு கூர்ந்து அந்த சொர்க்க நாட்களை மீண்டும் கொண்டு வாருங்கள். 

உணர்ச்சிகளை மதியுங்கள்

உங்கள் துணையின் தேவையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். எப்போதும் போல் இல்லாமல் புதிய முறையில் உடலுறவு கொள்ளுங்கள். உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகள் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்கும். இந்த சமயத்தில் தான் உங்கள் துணையின் விருப்பங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். நீடித்த பாலியல் இன்பத்தை அடைய உதவும் தீவிரமான முன்விளையாட்டு மூலம் ஒருவருக்கொருவர் உங்கள் அன்பையும், ஆர்வத்தையும் காட்டலாம்.

நேரம் ஒதுக்குங்கள்

இயந்திரமான உலகில், அலுவலக வேலை, பயணம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற நூறு செயல்பாடுகளுக்கு மத்தியில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் செலவழிக்க அதிக நேரம் ஒதுக்கவில்லை. வீட்டை விட தங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவோரில் நீங்கள் ஒருவராக இருந்தால், அதை மாற்ற நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். செல்போனில் மணிக்கணக்காகப் பேசுவதைக் காட்டிலும், இருவரும் நேரில் அமர்ந்து பேசிக்கொள்வது போன்று சிறந்ததாக இருக்க முடியாது. தம்பதிகள் இருவரும் சேர்ந்து செலவிட நேரம் ஒதுக்குங்கள்.

ஆரோக்கியமான உடலுறவு

ஆரோக்கியமான உடலுறவை வாழ அடிக்கடி உடலுறவு கொள்வது உதவும் என்று பலர் நினைக்கிறார்கள். உங்கள் துணையின் ஆசைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒரு சிறந்த நேரத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.