கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணும் விதமாக சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களைக் கொண்டு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சிவப்பு அதிக பாதிப்பையும், ஆரஞ்சு பாதிப்பையும், மஞ்சள் நிறம் லேசான பாதிப்பையும், முழுமையான பாதிப்பில்லாத மாவட்டங்கள் பச்சை நிறத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு பிரிப்பதன் மூலம் பாதிப்பு உள்ள மாவட்டங்களை எளிதில் கண்காணிக்க முடியும் . மேலும் தடுப்பு நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள முடியும். 

அதன்படி எந்தெந்த மாவட்டங்களில் எந்த நிறத்தில் உள்ளன என்று பார்க்கலாம், 

 

சிவப்பு நிற பகுதிகள்: 

 

சென்னை - 182

கோவை - 97

ஈரோடு - 60

திண்டுக்கல் - 55

நெல்லை - 56

நாமக்கல் - 41

செங்கல்பட்டு - 41

தேனி - 40

திருச்சி - 39

ராணிப்பேட்டை - 36

திருவள்ளூர் - 29

திருப்பூர் 26

மதுரை - 25

கரூர் - 23

விழுப்புரம் - 23

தூத்துக்குடி - 24

நாகப்பட்டினம் - 24
 


ஆரஞ்சு நிற பகுதிகள்: 

 

திருப்பத்தூர் - 16

கன்னியாகுமரி - 15
கடலூர் - 15

சேலம் - 14

திருவாரூர் - 13

விருதுநகர் - 11

திருவண்ணாமலை - 11

வேலூர்  - 11

தஞ்சாவூர் - 11

 

மஞ்சள் நிற பகுதிகள்:

 

நீலகிரி - 9

சிவகங்கை - 6

காஞ்சிபுரம் - 6

கள்ளக்குறிச்சி - 3

தென்காசி - 3
ராமநாதபுரம் - 2

பெரம்பலூர் - 1
அரியலூர் - 1

புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தற்போது புதிய மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படாததால் அவை பச்சை நிறத்தில் குறிப்பிடப்படுகின்றன.