மகிழ்ச்சியான விஷயம்..! இந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலம் எது தெரியுமா..? 

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 21,700 பெயர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 4 ஆயிரத்து 325 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதேவேளையில் 686 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை தடுப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது .இதன் எதிரொலியாக 40 நாட்கள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இந்த ஒரு நிலையில் திரிபுரா மாநிலத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் உடல் நலம் தேறி, நலமுடன் இருப்பதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரில் முதல் நபர் கடந்த ஆறாம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இரண்டாவது நபர் 23 ஆம் தேதியான நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். இவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இது தவிர 111 பேர் அறிகுறிகளுடன் இருப்பதாகவும், 227 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் குமார் டேப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.