உலகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்சமாக 1,30,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கரோனா அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து தொற்று பரவுவது அரிதாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தலை வழுக்கையாக இருப்பவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்று ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும், புகை பிடிப்பவர்களை எளிதில் தாக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆண்களின் விந்தணுக்களில் கொரோனா புகுந்து தாக்குவதாக கூறப்பட்டது.

 

இந்த வகையில் வழுக்கை தலையாக உள்ள ஆண்களை எளிதாக கொரோனா வைரஸ் தாக்குவதாக தி ஹெல்த் சைட் வெய்தி மருத்துவ ஆய்வு இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. பிரவுன் பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், ஆண்மைக்கு காரணமான ஆன்ட்ரோஜன் ஹார்மோன் கொரோனா வைரஸை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்கன் அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மாட்ரிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளில் 79% பேர் வழுக்கைத் தலை கொண்டவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.