Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸ் சிகிச்சை எடுத்து வந்தவர் "எஸ்கேப்"..! ராமநாதபுரம் மருத்துவமனையில் பரபரப்பு ..!

சீனாவில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் தற்போது உலக நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் வேலை செய்து வந்தவர்களும், கல்வி பயின்று  வந்த மாணவர்களும் அவரவர் சொந்த நாட்டிற்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

coroana virus affected person escaped from hospital in ramnad
Author
Chennai, First Published Feb 1, 2020, 1:03 PM IST

கொரோனா வைரஸ் சிகிச்சை எடுத்து வந்தவர் "எஸ்கேப்"..! ராமநாதபுரம் மருத்துவமனையில் பரபரப்பு ..! 

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடி பழங்குளத்தைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் ஆனதால் அவரை தேடு பணியில் தீவிரமாக உள்ளது 

coroana virus affected person escaped from hospital in ramnad

சீனாவில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் தற்போது உலக நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் வேலை செய்து வந்தவர்களும், கல்வி பயின்று  வந்த மாணவர்களும் அவரவர் சொந்த நாட்டிற்கு திரும்ப தொடங்கி உள்ளனர். அவர்களை அவரவர் நாட்டில் இறங்கும்போதே விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் இருந்து தமிழகம் வந்த மாதவன் என்பவருக்கு காய்ச்சல் இருமல் சளி  பாதிப்புகள் இருந்ததால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றார்.பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

coroana virus affected person escaped from hospital in ramnad

அதன் பின் மருத்துவர் பரிசோதனை செய்ய வந்த போது, உணவு அருந்திவிட்டு வருவதாக சொல்லி மருதுவானமையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அவரை தேடும் பணியில் இறங்கி உள்ளனர். 

மேலும் மிக எளிதாக கோரோனா வைரஸ் பரவும் என்பதால் ஏற்கனவே பீதியில் இருக்கும் மக்களுக்கு மேலும் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது மாதவன் எஸ்கேப் ஆன விஷயம்.

Follow Us:
Download App:
  • android
  • ios