வேறு பெண்ணுடன் தகாத உறவு..! நம்பி, மனதார நேசித்த காதலி தீயிட்டு தற்கொலை..! 

தான் காதலித்த நபர் தன்னை ஏமாற்றியதால் துக்கம் தாங்க முடியாமல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் குங்கும பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கு வசித்து வரும் 19 வயதான பிருந்தா என்ற கல்லூரி மாணவி அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி சந்தோஷமாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில் சந்தோஷ் பேசுவதை திடீரென நிறுத்தி விட்டு போன் செய்தாலும் எடுக்கவில்லையாம். இதனால் ஏன் எதற்காக இப்படி செய்கிறார் என மிகவும் விரக்தி அடைந்த பிருந்தாவிற்கு ஓர் அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. அதாவது சந்தோஷ் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருவதும், அவருடன் நட்பு ரீதியாக வெளியில் சுற்றித் திரிவதும், பின்னர் காதலிப்பதாக அப்பெண்ணிடம் ஒப்புக் கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது.

இதனால் மிகுந்த விரக்தி அடைந்து ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில் யாரும் வீட்டில் இல்லாத போது மண்ணெண்ணெய் எடுத்து தன் உடல் முழுக்க ஊற்றி தீ வைத்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது அப்போது பிருந்தாவிடம் மரண வாக்குமூலம் மட்டுமே பெற முடிந்தது. அப்போது சந்தோஷ் தன்னை ஏமாற்றி விட்டதால் இந்த முடிவுக்கு வந்தேன் என குறிப்பிட்டு விட்டு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரையும் ஒருவிதமான சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.