coimbatore to goa in air india
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது .
அதாவது கோவையிலிருந்து, ஸ்ரீலங்கா கொழும்பு நகர் வரை தன்னுடைய விமான சேவையை இயக்க தொடங்க ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமின்றி மற்ற மூன்று விமான சேவை நிறுவனமும் தங்களுடைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து கொழும்பிற்கும் இந்த சேவை வாரத்தில் நான்கு நாட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
இந்த சேவை வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை தொடங்கப்பட்டால் வழக்கமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டுமின்றி அனைவரும் எளிதில் இலங்கைக்கு பயணம் செய்ய நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
