Asianet News TamilAsianet News Tamil

காஃபி VS டீ : உடலுக்கு நல்லது எது? புத்துணர்ச்சி தருவது எது?

இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் காலை எழுந்ததும் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. காலையில் எழுந்ததும் பல் கூட துலக்காமல் டீ அல்லது காஃபி குடிப்பது அந்த இரண்டின் மீதான மனிதர்களின் ஆர்வத்தை தெரிவிக்க கூடியது.

coffee vs tea which one is real energy for health
Author
Chennai, First Published Sep 12, 2018, 12:54 PM IST

இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் காலை எழுந்ததும் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. காலையில் எழுந்ததும் பல் கூட துலக்காமல் டீ அல்லது காஃபி குடிப்பது அந்த இரண்டின் மீதான மனிதர்களின் ஆர்வத்தை தெரிவிக்க கூடியது. ஆனால் நீண்ட காலமாகவே டீ மற்றும் காஃபி இந்த இரண்டில் எது மனித உடலுக்கு நல்லது மற்றும் சிறந்தது என்கிற ஒரு பேச்சு இருந்து வருகிறது. டீ  மற்றும் காஃபி இரண்டிலுமே மனித உடலுக்கு சிறிய அளவில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய கஃபைன் இருக்கிறது. ஆனாலும் கூட டீ மற்றும் காஃபி மூலம் பல நன்மைகளும் இருக்கிறது.

coffee vs tea which one is real energy for health

இந்த நன்மை மற்றும் தீமைகளின் அடிப்படையில் டீ மற்றும் காஃபி இரண்டில் எது நல்லது என்று ஒரு முடிவுக்கு வர முடியும்.

1) உறக்கம் பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிகம் காஃபி குடிப்பவர்கள் இறவில் உறங்கும் போது சில சிக்கல்களை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது. ஆனால் அதே அளவு டீ குடிப்பவர்கள் இரவில் நல்ல தூக்கத்தை எதிர்கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

coffee vs tea which one is real energy for health

2) பற்களின் வெண்மை பற்களில் உள்ள வெண்மை நிறத்தை டீ மற்றும் காஃபி இரண்டில் உள்ள மூலப் பொருட்களுமே பாதிப்படையச் செய்கிறது என்பது தான் ஆய்வின் முடிவு. ஆனால் இரண்டில் டீ அல்லது காஃபி இந்த இரண்டில் எது பற்களின் வெண்மையை மிகவும் பாதிக்கச் செய்கிறது என்றால் அதற்கான பதில் டீ தான்.

coffee vs tea which one is real energy for health

3) மன ஒருங்கிணைப்பு டீ மற்றும் காஃபியை தொடர்ச்சியாக அருந்தும் பலரிடம் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவர்களில் டீ அருந்துபவர்கள் தான் சிக்கலான சூழ்நிலையை மன ஒருங்கிணைப்புடன் எதிர்கொள்வதில் வல்லவர்களாக உள்ளனர். காஃபி அருந்துபவர்கள் மன ஒருங்கிணைப்பு குறைவானவர்களாகவே உள்ளனர் என்கிறது ஆய்வு முடிவு.

coffee vs tea which one is real energy for health

4) இதயத்திற்கு நல்லது  டீ மற்றும் காஃபி ஆகிய இரண்டுமே மனித உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. ஆனால் இரண்டுமே இதயத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் டீயை விட காஃபி தான் இதயத்திற்கு இதமானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

coffee vs tea which one is real energy for health

5) எலும்புகளின் பலம்  தினந்தோறும் டீ குடிப்பவர்களின் எலும்புகள் மிகவும் வலிமையானதாக உள்ளது. அதிலும் எலும்புகள் பலம் இழப்பவது இவர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் அதே சமயம் காஃபியானது அவற்றை அருந்துபவர்களின் எலும்பின் பலத்தை பலவீனம் செய்யக்கூடிய மூலப் பொருட்களை கொண்டுள்ளது.

coffee vs tea which one is real energy for health

6) டீ தான் சிறந்தது உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு ஆய்வு முடிவுகளும் காஃபியை விட டீயை தான் உடலுக்கு நல்லது என்கிற முடிவை கொடுத்திருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் காஃபியை குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறிவிட முடியாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தில் டீ மற்றும் காஃபி ஆகிய இரண்டுக்குமே முக்கிய பங்குகள் உண்டு.

Follow Us:
Download App:
  • android
  • ios