காதில் குட்டி போட்டு குடித்தனம் செய்த கரப்பான் பூச்சி ..! வாலிபரின் வலது காதில்...திக் திக்  காட்சி..! 

சீனாவில் குவாங்டாங் மாவட்டத்தில் உள்ள ஹூய்சோ என்ற இடத்தில் வசித்து வரும் இளைஞர் எல்வி. இவர் நன்கு உறக்கத்தில் இருந்தபோது திடீரென தன் காதில் வலி ஏற்படுவது போலவும் ஒரு விதமான அரிப்பை ஏற்படுத்துவதாகவும், சப்தம் கேட்பதாகவும் தெரிவித்து உள்ளார் 

ஆனால் எதற்காக திடீரென இப்படி தோன்றுகிறது என தெரியாமல் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.வலியால் துடித்த எல்வியை சோதனை செய்த மருத்துவர்கள் எல்வியின் காதில் இருந்த கரப்பான் பூச்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

ஒரு கரப்பான் பூச்சி அல்ல... ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதன் 10 க்கும் மேற்பட்ட சிறு கரப்பான் பூச்சி குட்டிகளும் காதுக்குள் இருந்துள்ளது. கரப்பான் பூச்சி சாதாரணமாக எவ்வளவு வேகத்தில் ஓடும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. அதுவும் குட்டி கரப்பான் பூச்சி என்றால் சொல்லவே தேவையில்லை. கண்சிமிட்டும் நேரத்தில் இருக்குமிடம் தெரியாது. ஆனால் ஒரு வாலிபரின் காதுக்குள் இத்தனை கரப்பான் பூச்சிகளும் ஒன்றாக அங்கும் இங்குமாக சுழன்று கொண்டிருக்கும் அந்த ஒரு தருணத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா ?

நினைத்தாலே மனம் பதைபதைக்கும். இப்படி ஒரு நடக்கக் கூடாத விஷயத்திற்கு சிக்கிக் கொண்டவர் எல்வி. பின்னர் மருத்துவர்கள் கொண்ட குழு எல்வியை படுக்க வைத்து, அவரின் காதிலிருந்து ஒவ்வொரு கரப்பான் பூச்சியை வெளியேற்றுவதில் முயற்சி செய்து உள்ளனர்.

பின்னர் நீண்ட நேர சிகிச்சைக்கு பின் ஒரு பெரிய கரப்பான் பூச்சியையும் 10 க்கும் மேற்பட்ட சிறு கரப்பான் பூச்சி குட்டிகளையும் வெளியே எடுத்து உள்ளனர். இந்த செய்தி அங்கு மட்டுமல்ல.. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எப்படி கரப்பான் பூச்சி காதுக்குள் போயிருக்கும்? அதுவும் குட்டி கரப்பான் பூச்சி எப்படி உருவானது? இவை அனைத்தும் ஓவர் இரவில் நடக்கக் கூடியதா என்ற அதிர்ச்சி கேள்வியும் எழுகிறது. ஆனால் எப்படி நடந்திருக்கும் என்றால், சில நாட்களுக்கு முன்பாகவே பெரிய கரப்பான் பூச்சி காதுக்குள் சென்று இருக்கும். ஆனால் காதுக்குள் சென்றது கூட தெரியாமல் இந்த வாலிபர் எப்படி இருந்தார் என்றே தெரியவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது. எது எப்படியோ காதில் உள்ள கரப்பான் பூச்சியை எடுத்த பின்பு தான் பெருமூச்சு விட்டுள்ளர்