தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் வருகிறது. கொரோனா எதிரொலியால் ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில் இருக்கும் போது, வரும் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு  தளர்த்திக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த  ஒரு  நிலையில் கொரோனா  இந்தியாவில் சற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதை அடுத்து, பல மாநிலங்கள்   மத்திய அரசிடம் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகிறது. இந்த ஒரு நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயிர்ப்பித்து உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது, விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.அதில் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது. மேலும் சிகிக்கைக்காக 2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன என தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய முதல்வர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன என்றும்
கொரோனா தாக்கத்தை பொறுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்,
சென்னையில் பணியின் போது உயிரிழந்த காவல் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும்
உயிரிழந்த அருள்காந்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்

10 ஆம் வகுப்பு தேர்வு

இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம் என்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்பது பற்றி அலோசித்து முடிவெடுக்கக்கப்படும்,10ம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான முக்கியமான தேர்வாகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்