ஒவ்வொரு கால கட்டத்திலும் ''பேஷனாக'' உடை அணிவது மக்களால் விரும்பப்படுவதால், நவீன உலகில் பல்வேறு மாறுதல்களை உருவாக்கி வருகிறது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ''பேஷனாக'' உடை அணிவது மக்களால் விரும்பப்படுவதால், நவீன உலகில் பல்வேறு மாறுதல்களை உருவாக்கி வருகிறது. கரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலம் ''ஷாப்பிங்'' செய்யும் நபர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. பெரும்பாலான இன்டெர்வியூ அனைத்தும் ஆன்லைன் மூலம் நடப்பதால், வீட்டில் இருக்கும் போதும் நல்ல உடை அணிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இதுபோன்ற சூழலில், நாம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்? எப்படி உடை அணிந்து கொள்ளவது? என்பவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

ஒவ்வொருவரும், தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் அழகியாக ஜொலிக்கலாம். குட்டையாகவும் நல்ல கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது அணிந்திருக்கும் ஆடைகள் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.
ஜூம் இன்டெர்வியூக்கு தேர்வு செய்யப்படும் போது:
உடையின் கழுத்துப்பட்டை முக்கியமானது. பொதுவாக ஜூம் இன்டெர்வியூக்கு உங்கள் உடலின் மேல் புறம் மட்டுமே தெரியும் என்பதால், நீங்கள் அணிய தேர்வு செய்யும் ஆடையின் கழுத்துப்பட்டை மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு உயர்-கழுத்து ஒரு வட்டக் கழுத்து அல்லது ஆடை குறைப்பு என்பது சில சமயங்களில் பிரச்சனையில் முடியும் . அதற்குப் பதிலாக நீங்கள் வி-நெக் டீ-ஷர்ட் அல்லது டாப்பை எடுத்துக் கொள்ளுங்கள். காலர் சட்டையில் பட்டன் அவிழ்க்கப்படாது இருப்பது நல்லது.
தலைமுடி: உங்கள் தலைமுடி கருப்பாக இருந்தால், கருப்பு நிற உடையினை தேர்வு செய்யவேண்டாம்.
ஏனெனில், சில சமயங்களில் இந்த கலர் காமினேஷம் ஆன்லைன் ஜூம் இன்டெர்வியூக்கு சிறந்த தெளிவுத்திறனை வழங்காது. மேலும், இந்த கலர் காமினேஷன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும் பட்சத்தில் உங்களை இன்டெர்வியூ செய்பவரைக் குழப்பவும் நேரிடும். எனவே, கறுப்புக்கு மாறாக மாறுபாட்ட கலர் உடையினை நீங்கள் தேர்வுசெய்வது சிறந்தது.
உடையில் சரியான கலரினை தேர்வு செய்க: பொதுவாக உடையின் கலர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், அவை தான் உங்கள் மீது நல்ல பிம்பத்தை உருவாக்கும்.

கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ உடையினை அணியலாம். மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக்கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும் படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள் ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பது போன்ற உடைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.
உடை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விடவேண்டாம். முடியை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக்கூடாது. எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உடைகளை சரியான முறையில் தேர்வு செய்யுங்கள்!
