அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு சென்னையில் இரவு நேரத்தில் கடும்குளிர் நிலவ வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இயல்பாக இருப்பதை விட 24 சதவிகிதம் குறைவாக பெய்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் தெரிவித்துள்ள தகவல் படி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு அதிக குளிர் இருந்ததாகவும், இதே நிலைதான் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த காலக்கட்டத்தில் இந்தியாவே நல்ல குளிரை உணர்ந்து வருகிறது என்றும், அதே சமயத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் தான் மிதமான குளிர் காணப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் வடகிழக்கு பருவக்காற்று முடிவடைந்துவிட்டதால் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும்.சென்னையை பொறுத்தவரை 18 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருந்தது.

மாதவரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 16 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இதை விட மிக மிக குறைந்த வெப்பநிலையாக வேலூரில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது