துப்புரவு பணியாளர் வேலைக்கு கியூவில் நிற்கும் என்ஜினீயரிங் பட்டதாரிகள்..!

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்பரவு பணியாளர் வேலைக்கு பல என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன்னதாக கோவை மாநகராட்சியில் மட்டும் 2000 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 500 பேர் ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 549 இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக ஆர்வமாக விண்ணப்பித்து இருந்துள்ளனர்.

அதில் குறிப்பாக 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நேர்காணல் நடத்தப்பட்டது. வயதுவரம்பு பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 21 முதல் அதிகபட்சமாக 56 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பித்தவர்கள் குறைந்தபட்ச தகுதியாக தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ஆனால் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 70% பேர் பத்தாம் வகுப்பு வரை படித்து இருந்துள்ளனர். இது தவிர பட்டதாரிகள் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் ஐடிஐ டிப்ளமோ என படித்தவர்களும் கூட துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.