"தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை" என்ற பழமொழி தமிழ் சமூகத்தில் இருந்து வருகிறது. இந்த பழமொழி உருவாகக் காரணம் தெரியவில்லை. அவர்களின் அனுபவ அறிவால் விளைந்ததே இந்த பழமொழியாக இருக்கலாம். இந்த நிலையில், பிள்ளைகளுக்கு ஏற்படும் புத்திக்கூர்மை என்பது தாயின் குரோமோசோம்களின் வழியாகத்தான் கடத்தப்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும் 2 எக்ஸ் குரோமோசோம்கள் வழியாகத்தான் புத்திக்கூர்மை எனும் பண்பு கடத்தப்படுகிறது. ஒருவேளை தந்தையிடம் இருந்து எக்ஸ் குரோமோசோம்கள் சென்றாலும், அதில் இருக்கும் புத்திக்கூர்மை பண்பு தானாகவே செயலிழந்து விடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விஞ்ஞானிகள் எலிகளிடம் சோதனை நடத்தினர். அதில், தாய் வழியாக, அதிக குரோமோசோம்கள் செலுத்தப்பட்டபோது பிறந்த குட்டிகள் தலை பெரியதாகவும், உடல் சிறியதாகவும் இருந்துள்ளன. தந்தை எலியின் குரோமோசோம்கள் அதிகம் செலுத்தபட்டு பிறந்த குட்டிகளின் உடல் பெரியதாகவும் தலை சிறியதாகவும் இருந்திருக்கின்றன.
இந்த சோதனையடுத்து, தாயிடம் இருந்தே புத்திக்கூர்மை, சிந்தனை, மொழியறிவு திட்டமிடல் போன்ற பண்புகள் கடத்தப்படுகின்றன. இதேபோல தந்தையிடம் இருந்து பசி, செக்ஸ், ஆளுமைத்தன்மை போன்ற பண்புகள் கடத்தப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மூளையின் செரிபரல் கார்டெக்ஸ் பகுதியில்தான் புத்திக்கூர்மை, திட்டமிடல் காரணமாக உள்ளன. செரிபரல் கார்டெக்ஸ்-ல் உள்ள செல்களில் தாய்வழி குரோமோசோம்கள் மட்டுமே இருப்பதாகவும், தந்தை வழி குரோமோசோம்கள் அந்த செல்களில் சுத்தமாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.
தாயிடம் இருந்து கடத்தப்படும் எக்ஸ் குரோமோசோம்கள் காரணமாகவே குழந்தைகள் புத்திக்கூர்மையை கற்றுக் கொள்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அன்பை மட்டும் அல்ல, நல்லறிவை விதைக்கும் பொறுப்பு தாய்-தந்தை இருவருக்கும் பொறுப்பு உண்டு என்றாலும், அதிகமான பொறுப்பு தன்னிடமே உள்ளதை தாய்மார்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை கடத்தப்படுவது தாய்வழி குரோமோசோம்களே என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதனால்தான் என்னவோ... நம் முன்னோர்கள் தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழியை உருவாக்கி இருப்பார்களோ...
