ஹோட்டலில் நபர் ஒருவர் ஆம்லெட் போடும்போது முட்டையில் இருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஹோட்டலில் ஆம்லெட் போடும்போது முட்டையில் இருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 ஆம்லெட் பிடிக்காத நபர்கள் நம்முடைய நாட்டில் குறைவுதான். பலர் பல விதங்களில் ஆம்லெட்டை செய்கிறார்கள். ஆனால் கோழி முட்டைக் கொண்டு ஆம்லெட் செய்யும் போது அதிலிருந்து கோழிக்குஞ்சு வெளிவரும் காட்சியை நீங்கள் பார்த்ததுண்டா? இல்லையென்றால் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஹோட்டலில் ஆம்லெட் போடும் நபர், அதற்காக முட்டையை எடுத்த உடனேயே அதிலிருந்து ஒரு கோழிக்குஞ்சு வருகிறது. அந்த நபர் மீண்டும் இன்னொரு முட்டையை உடைக்கும் போது, வேறொரு கோழிக்குஞ்சு வெளிவருகிறது. நொடி பொழுதில் நடந்த இந்த சம்பவத்தை பார்ப்பவர் கண்கள் பூத்து தான் போகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஆம்லெட் செய்யும் நபருக்கு அருகில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது. ஒரு வாடிக்கையாளரின் ஆர்டருக்காக அந்த நபர் ஆம்லெட் செய்ய முட்டையை உடைத்தவுடன், அதிலிருந்து குஞ்சு வெளியே வந்து சட்டியில் விழுகிறது.

ஒருமுறை மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் இப்படி நடக்கிறது. குஞ்சு வெளியே வந்தவுடன், ஆம்லெட் செய்யும் நபர் அதை எடுத்து மற்றொரு நபரிடம் கொடுக்க அவர் அதை பிடித்துக்கொள்கிறார். இந்த காட்சியைப் அங்கிருந்த மக்கள் ஆச்சரித்ததுடன் கண்டு ரசித்தனர். இந்த வீடியோவைப் பார்த்தால், முதலில் அனைவருக்கும் ஆச்சரியம் வருகிறது. இப்படிக்கூட நடக்குமா என இந்த வீடியோ அனைவரையும் சிந்திக்க வைகிறது. பலரால் இதை நம்ப முடியவில்லை. 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இவர் பெரிய மேஜிக் மேனாக இருப்பார் போலயே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது போன்ற வேடிக்கையான வித்திரமான சம்பவங்கள் நம்மை, சில சமையம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. 

View post on Instagram