மெட்ரோ ரயிலில் ‘Daily Pass’..! வெறும் ரூ.100 இல் எத்தனை பேர் பயணம் செய்யலாம் தெரியுமா உங்களுக்கு..? 

சென்னை மெட்ரோ ரயில் வந்த வுடன் தற்போது மக்கள் நாளுக்கு நாளுக்கு அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.  அதிலும் குறிப்பாக தினமும் பயணம் செய்பவர்களுக்கு ஏதுவாக, மற்றும் மார்க்கெட்டிங் துறையை சேர்ந்தவர்கள் மிக எளிதாக குறைந்த விலையில் சிரமமே இல்லாமல் பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாக ரூ.100 காண பாஸ் அறிமுகம் செய்துள்ளது.

அதன் படி, Daily Pass என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் ‘Daily Pass’ குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்...

சென்னை மெட்ரோ சேவையில் வெறும் 100 ரூபாய் கட்டணத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த ‘Daily Pass’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் 150 ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். ஒரு நாள் முழுவதும் இந்த ‘Daily Pass’-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்...

மேலும் இந்த ‘Daily Pass’-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை...உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் நன்மை....

பயணிகளின் எண்ணிக்கையை அதிடர்கரிப்பதற்காகவும், மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் சரிவர இல்லை என்றே பலரும்கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, தற்போது மெட்ரோ ரயில் அளிக்கும் இந்த நல்ல திட்டத்தை  நாமும் பயன்படுத்தி பயனடையலாம்.