கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் "சென்னை" தான் "அதில்" முதலிடம்..! அதிர்ந்து போன உள்துறை அமைச்சகம்..! 

குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடப்பது குறித்தும் தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதும் நம் கண்முன்னே பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ நடத்திய ஓர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்து உள்ளது. ஆபாச படங்களை பார்க்கும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்து உள்ளது என்றும் அதிலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது என்றும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி ரவி தெரிவிக்கும்போது, "தங்களுடைய மொபைல் போனில் அல்லது பயன்படுத்தும் லேப்டாப்பில் குழந்தைகள் குறித்து தவறான புகைப்படம் மற்றும் ஆபாச படங்கள் வைத்திருந்து பார்ப்பதை கண்டுப்பிடிக்கப்பட்டால் கைது செய்யப்படும் என்றும் அதன் ஐபி எண்ணை வைத்து விரைவில் கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர்த்து ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப் மூலம் பரப்புவதும் மிகப்பெரிய குற்றம் என்றும் இவ்வாறு மீறி செயல்படுபவர்கள் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் இதுபோன்று வீடியோக்களை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்பவர்கள் குறித்த தகவலை 155260 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் தமிழ் கலாச்சாரம் பெயர் போனது. ஆனால் இன்று அதே தமிழ்நாடு ஆபாச படம்  பார்ப்பவர்களில் முதலிடத்தை பிடித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது