Asianet News TamilAsianet News Tamil

உஷார்! 30 முதல் 39 வயது வயதுடையவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம்! மாநகராட்சி அதிர்ச்சி தகவல்!

இதுவரை கொரோனா பாதித்தவர்களில் ஆண்கள் 68.78 சதவீத்தினரும், பெண்கள் 31.22 சதவீத்தினரும்  பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Chennai corporation Shocking News Coronavirus prevalence is 30 to 39 years old
Author
Chennai, First Published Apr 15, 2020, 3:47 PM IST
சென்னையில் 30 முதல் 39 வயதிற்குட்பவர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை   மாநகராட்சி ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அதன் படி தமிழகத்திலிலேயே சென்னையில் தான் அதிகபட்சமாக 205 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளத்தாகவும், அதிலும் குறிப்பாக ராயபுரம்  மண்டலத்தில் மட்டும் 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது .
Chennai corporation Shocking News Coronavirus prevalence is 30 to 39 years old

இதுவரை கொரோனா பாதித்தவர்களில் ஆண்கள் 68.78 சதவீத்தினரும், பெண்கள் 31.22 சதவீத்தினரும்  பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வயது விவரம் மற்றும் பாதிக்கப்பட்டோரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

30 முதல் 39 வயது வரை  உடையவர்கள் - 44 பேரும்

50  முதல் 59 வயது  வரை உடையவர்கள் - 39 பேரும்

60 முதல் 69 வயது  வரை உடையவர்கள் - 21 பேரும்

70 முதல் 79 வயது  உடையவர்கள் - 13 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்  இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்

பொதுவாகவே பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுகின்றனர். பெரும்பாலும் ஊரடங்கு உத்தரவில் கூட ஆண்கள் தான் அதிக அளவில் வெளியில் சுற்றி திரிந்து  வருகின்றனர். அவர்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் 30 முதல் 39 வயது உடையவர்கள் தான் 44 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Chennai corporation Shocking News Coronavirus prevalence is 30 to 39 years old

மாஸ்க் அணிவது

எந்த விதமான நோய் தொற்றுக்கும் ஆளாகாதவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு  உடையவர்கள் - பருத்தி  துணியால் ஆன மாஸ்க் அணிந்து அதனை மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே போன்று 60 வயதிற்கு அதிகமானோர் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோர் கட்டாயம்  3 அடுக்கு முக கவசத்தை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Follow Us:
Download App:
  • android
  • ios