Asianet News TamilAsianet News Tamil

சென்னைக்கு செம்ம ஷாக்... திடீரென அதிகரிக்கும் கொரோனா..!

சென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
 

Chennai Corona suddenly increases
Author
Tamil Nadu, First Published Sep 21, 2020, 3:20 PM IST

சென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

சென்னையில் கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கோவில்கள் திறக்கப்பட்டன. மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. சென்னையிலும் மாநகர பஸ்கள் ஓடின. மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டது.

ஆனாலும் கடந்த வாரம் வரை கொரோனா பாதிப்பு சென்னையில் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்தது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் கொரோனா நோய் தொற்றை கண்டறியும் வகையில் வாரத்துக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சதவீதம் அதிகரித்து உள்ளது.Chennai Corona suddenly increases

இதில் ஆலந்தூர் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.3 சதவீதம் அதிகரித்து உள்ளது. திருவொற்றியூரில் 4.8 சதவீதமும், மணலியில் 4.7 சதவீதமும், தண்டையார் பேட்டையில் 3.4 சதவீதமும், மாதவரத்தில் 2.7 சதவீதமும், அண்ணாநகரில் 2.7 சதவீதமும், திரு.வி.க.நகரில் 2.6 சதவீதமும், அடையாறில் 1.4 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 0.9 சதவீதமும், ராயபுரத்தில் 0.8 சதவீதமும், பெருங்குடியில் 0.6 சதவீதமும் நோய் தொற்று அதிகரித்து உள்ளது.

Chennai Corona suddenly increases

ஆனால் மற்ற 4 மண்டலங்களில் நோய் தொற்று குறைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நாங்கள் நோயை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தளர்வுகளால் கொரோனாவின் தாக்கம் எந்த வகையில் இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.
ஒருவருக்கு கொரோனா தொற்றை உறுதி செய்யும் நேரத்தில் அவரை சார்ந்து இருக்கும் 10 பேருக்கு நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். பொது போக்குவரத்து தொடங்கி 21 நாட்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை” என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios