போலீசுக்கு பயந்து தலைமறைவான செவிலியரை தாக்கிய அர்ச்சகர்..!  2 மாதம் பூஜை செய்ய தடை...! ரூ.5 ஆயிரம் அபராதம்..! 

கோவிலில் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு 2 மாதம் பூஜை செய்வதற்கு தடை விதித்தும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்து, சாமி தரிசனம் செய்ய வந்த செவிலியர் லதா என்ற பெண்ணிடம் தீட்சிதருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அர்ச்சனை செய்வதில் ஏற்பட்ட  வாக்குவாதம் காரணமாக திடீரென அப்பெண்ணை தாக்கினார் தீட்சிதர் தர்ஷன். 

அதன் பின், இது குறித்து காவல் நிலையத்தில் லதா அளித்த புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால்  தர்ஷன் தற்போது தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், லதாவை தாக்கிய தர்ஷனுக்கு திருக்கோவில் பணியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டதோடு 5 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர் பொது தீட்சிதர்கள்

இருப்பினும் லதா ஒரு செவிலியர் என்பதால், செவிலியர் சங்கம் சார்பில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் ஒரு கோரிக்கை மனுவை வைத்து உள்ளனர். அதில் தீட்சிதர் தர்ஷனை கண்டித்து வரும் வியாழனன்று தெற்கு சன்னதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.